உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / கியா சிரோஸ் கிராஷ் டெஸ்டில் 5 - ஸ்டார்

கியா சிரோஸ் கிராஷ் டெஸ்டில் 5 - ஸ்டார்

'சிரோஸ்' காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார், 'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார்களை வாங்கிய முதல் 'கியா' கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.பெரியவர் பாதுகாப்பு, குழந்தை பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. பெரியவர் பாதுகாப்பில், 49 புள்ளிகளுக்கு, 44.42 புள்ளிகளும், குழந்தை பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு, 30.21 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்த புள்ளிகள், சிரோஸ் காரின் அனைத்து பெட்ரோல் மாடல்களுக்கும் பொருந்தும்.போட்டியாளர்களான, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 3 எக்ஸ்.ஓ, ஸ்கோடா கைலாக் ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில், கிராஷ் டெஸ்டில் கியா சிரோஸ் எஸ்.யூ.வி., இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிக புள்ளிகளுடன் ஸ்கோடா கைலாக் எஸ்.யூ.வி., முதலிடத்தில் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை