எம்.ஜி., ஹெக்டர் 2026 ரூ. 12 லட்சத்தில் 4.7 மீ எஸ்.யூ.வி.,
'எம்.ஜி.,' நிறுவனம், 'ஹெக்டர் 2026' மாடல் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. நீளம் 4.7 மீட்டர் உள்ள இந்த காரில், 5 முதல் 7 பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம்.இதன் முன்புற கிரில், பம்பர்கள், அலாய் சக்கரங்கள், ஹெட் லைட் மற்றும் டி.ஆர்,எல்., லைட்டுகள், உட்புற கேபின் ஆகியவை புதிய வடிவில் வந்துள்ளன. இதில், ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. 2026 மாடல் டீசல் இன்ஜின் கார், அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ளது. கியர்பாக்ஸ் மற்றும் இதர உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை.உட்புறத்தில், இரண்டு, மூன்று விரல்களில் ஸ்வைப் செய்யும் வசதி கொண்ட புதிய செங்குத்தான 14 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர், பவர்டு மற்றும் வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், டிஜிட்டல் சாவி வசதி, சென்சார்கள், கேமராக்கள் மற்றும் சீட்கள் மேம்பாடு, 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் 2 பாதுகாப்பு, நான்கு சக்கர டிஸ்க் பிரேக்குகள் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.மொத்தம் ஐந்து நிறங்களில் வரும் இந்த கார், இரு புதிய நிறங்களில் கிடைக்கிறது.