சியரா எஸ்.யூ.வி., டாடாவின் முதல் மிட் சைஸ் எஸ்.யூ.வி.,
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'சியரா' எஸ்.யூ.வி., காரை புதுப்பித்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது. இது, மிட் சைஸ் எஸ்.யூ.வி., பிரிவில் வரும் இந்நிறுவனத்தின் முதல் கார் ஆகும். இந்த காரில் 4.3 மீட்டர் உள்ள புதிய 1.5 லிட்டர், 4 - சிலிண்டர் என்.ஏ., பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின்கள் வருகின்றன. இன்ஜின் வகையை பொறுத்து, 6 - ஸ்பீடு மேனுவல், 6 - ஸ்பீடு மற்றும் 7 - ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவில்லை. தற்போது, பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் மட்டுமே வரும் இந்த கார், 'ஆர்கோஸ்' என்ற பிரத்யேக கட்டுமான தளத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.