சென்னையில் அல்ட்ராஒய்லட் இ.வி., பைக்
'அல்ட்ராஒய்லட்' மின்சார பைக் நிறுவனம், அதன் முதல் விற்பனை மற்றும் பராமரிப்பு மையத்தை தமிழகத்தில் தொடங்கி உள்ளது. சென்னை அண்ணா சாலையில், சைதாப்பேட்டை மெட்ரோ அருகில் இது அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில், விற்பனை, பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் பரிமாற்றம் என அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. இங்கு, இந்நிறுவனத்தின் 'எப்.77., மேக் 2' என்ற மின்சார ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனையில் உள்ளது. கூடுதலாக, 'சூப்பர் நோவா' டி.சி., பாஸ்ட் சார்ஜிங் கட்டமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் அமைந்துள்ளன.