உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / மொட்டை மாடியில் போம் கான்கிரீட் அமைக்கும் விஷயத்தில் தேவை அலர்ட்

மொட்டை மாடியில் போம் கான்கிரீட் அமைக்கும் விஷயத்தில் தேவை அலர்ட்

எனது மொட்டை மாடியில் சுருக்கி தளம் அமைத்து பூசியுள்ளோம். தற்போது ஓதம் அடிக்கிறது. டைல்ஸ் தவிர என்ன பராமரிப்பு செய்யலாம்? -ராம்குமார், ரத்தினபுரி. உங்கள் மொட்டை மாடியினை நன்கு சுத்தம் செய்து, 'பாலிமர் கோட்' மற்றும், 45 ஜி.எஸ்.எம்., பைபர் மெஷ் கொண்டு 'பேஸ் கோட்' அடித்து, அதன் மேல் வெயில் மற்றும் குளிர் காலங்களில் விரிந்து சுருங்கும் தன்மை உடைய, தரமான எலாஸ்டோ மெரிக் பெயின்ட் (தகுந்த மேற்பார்வையுடன்) இரண்டு கோட் அடித்துவிட்டால், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து மொட்டை மாடி தளத்தை நீண்ட நாட்கள் பாதுகாக் கலாம். நீங்கள் உடனே இதை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வீட்டின் உள்ளே பெயின்ட் உரிந்து வீணாகிவிடும். எங்கள் லே-அவுட்டில் காலி இடம், 20 சென்ட் உள்ளது. கூடைப்பந்து மைதானம் அமைக்கலாம் என உள்ளோம். உங்கள் ஆலோசனை கூறவும். -ஜோதி, பீளமேடு. முதலில் சுமார், 94 அடி X 50 அடி இடத்தை தேர்வு செய்து, களிமண் அனைத்தையும் அப்புறப்படுத்தி நல்ல மண், மெட்டல் கான்கிரீட், மற்றும் ஆர்.சி.சி., தளம் 'வேக்கம் டீவாட்டர்டு' முறையில் லெவல் அமைத்து, ஸ்போர்ட்ஸ் எப்பாக்சி பெயின்ட் கொண்டு, வரைவு மார்க்கிங் செய்ய வேண்டும். இவை அனைத்தையும், தகுந்த பொறியாளர் மேற்பார்வையுடன் செய்யவும். மொட்டை மாடியில் சுருக்கிக்கு பதில், 'போம் கான்கிரீட்' உபயோகிக்கலாம் என்று நண்பர் கூறுகிறார். உங்கள் ஆலோசனை தேவை. -சிவகுமார், திருமால் நகர். 'போம் கான்கிரீட்'டானது எடை குறைவு மற்றும் வலிமைத்தன்மை குறைவான இடங்களில் அதிகமாக உபயோகிக்கப்படும். ஆனால், மொட்டை மாடி போன்ற இடங்களில் அதிக தேய்மானம் மற்றும் தட்ப வெப்ப சூழ்நிலைகளின் கடுமையான எதிர் விளைவுகளால், போம் கான்கிரீட் அந்த அளவு பயன்படாது. ஏனென்றால் அதன் அடர்த்தி குறைவு. ஆனால், போம் கான்கிரீட் கீழே உள்ள தளத்தில், வெப்பத்தினை கணிசமாக குறைக்கும் தன்மை உடையது. எனினும், நீங்கள் இதனை அமைப்பதாக முடிவு செய்தால், அதன் மேல், இன்னொரு லேயர் சிமென்ட் கலவை தளம் அல்லது டைல்ஸ் தளம் அமைத்தல் மிக அவசியம். நெரிசலான நகர் பகுதியில் உள்ள, எனது பழைய வீட்டில் எப்போதும் ஒலி மற்றும் துாசி போன்ற தொல்லைகள் உள்ளன. இதனை குறைப்பது எப்படி? -சுந்தர், கோவை. வாய்ப்பிருந்தால் உங்கள் வீட்டின் பழைய மர ஜன்னல்களை அகற்றி, யு.பி.வி.சி., ஜன்னல்களாக மாற்றலாம். கனமான திரைசீலைகள் அமைக்கலாம். முன் வாயிலில் பிளாஸ்டிக் ஸ்கிரீன் அமைக்கவும். ஓரளவு தீர்வு கிடைக்கும். ஐந்து வருடங்களுக்கு முன் கட்டிய, எங்கள் வீட்டில் அப்போது கரையான் மருந்து அடித்தோம். ஆனால், தற்போது எங்கள் வார்டுரோப் பகுதி கரையான் அரித்துள்ளது. இது எதனால்? -மணி, சுந்தராபுரம். கரையான் மருந்து எவ்வாறு அடிக்கப்பட்டது என்று நீங்கள் கூறவில்லை. தரமான, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரையான் மருந்தினைக் கொண்டு குழி தோண்டும் போது, ப்ளோரிங் மெட்டல் கான்கிரீட் போடும்போது மற்றும் வீடு முடிந்த நிலையில் சுற்றுப்புற சுவர் அருகிலும் அடித்திருக்க வேண்டும். அவ்வாறு மூன்று ஸ்டேஜ்களில் செய்தால் மட்டுமே கரையான் அண்டாது. எனினும் தகுந்த நிபுணர்களைக் கொண்டு, பூச்சி களை கட்டுப் படுத்தும் பணிகளை செய்தால், குறைந்தது, 10 ஆண்டுகள் பலன் கிடைக்கும். -பொறியாளர்: செவ்வேள்: தலைவர்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி