உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / அதிகபட்ச வெப்பநிலையை அடையும் கான்கிரீட் : கவனிக்கத்தவறினால் பிற்காலத்தில் விபரீதம் நிச்சயம்

அதிகபட்ச வெப்பநிலையை அடையும் கான்கிரீட் : கவனிக்கத்தவறினால் பிற்காலத்தில் விபரீதம் நிச்சயம்

இன்றைய நவீன கட்டுமானத்திற்கு 'கான்கிரீட்' ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும் அதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் எண்ணற்றவை. குறிப்பாக, கட்டடங்களில் கான்கிரீட் போடப்படும்போது தட்பவெப்பம் காரணமாக, வெடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.சிமென்ட், மணல், கல் துகள்கள் மற்றும் நீர் ஆகியவற்றை கொண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கப்படுகிறது. இக்கலவையில் உள்ள வேதிப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று வினைபுரிந்து வெப்பத்தை வெளியிடுகின்றன. இந்த வெப்ப உற்பத்தியின் விளைவாக, கான்கிரீட் இறுதியில் திடமான நிலையை அடைகிறது.வெளிப்புற வெப்பநிலை ஏற்கனவே உயர்வாக இருக்கும்போது, சிமென்ட் உறைதலால் உருவாகும் கூடுதல் வெப்பம், கான்கிரீட்டில் உள் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கிறது.இந்த வெப்பத்தை குறைக்க, அதிக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பிரச்னைகள் ஏற்படும் என்கிறார், பி.ஏ.ஐ., தொழில்நுட்பக் குழு துணை தலைவர் கார்த்திக்.அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...கான்கிரீட்டில் வெப்பம் அதிகரிப்பதால், பல பிரச்னைகள் தோன்றுகின்றன. வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, கான்கிரீட்டில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதில் கான்கிரீட்டில் மட்டுமல்லாமல் பூச்சுகள் மேற்பரப்பிலும் நிகழலாம்.இப்பிரச்னையை தவிர்க்க, கான்கிரீட் ஊற்றுவதற்கு நள்ளிரவு நேரமே சிறந்தது. ஜல்லி, மணல் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை நிழலில் சேமிக்க வேண்டும். கான்கிரீட்டின் வெப்பத்தை தணிப்பதற்கு பொதுவாக, இரண்டு வகையான கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.ஒன்று வேதியியல் கலவை, மற்றொன்று கனிமக் கலவை. வேதியியல் கலவைகள் கான்கிரீட் உறைவதை தாமதப்படுத்துகின்றன. இதனால், கான்கிரீட் வெப்பத்தை வெளியிடுவது தாமதமாகி, வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.இவ்வகையான கலவைகள் 'தாமதப்படுத்திகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. கான்கிரீட்டின் வெப்பத்தை குறைப்பதற்காக, கலவைகளை பயன்படுத்தும் போது பரிசோதனை அடிப்படையிலான கலவைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.இவற்றை பரிசோதித்து பொருத்தமான கலவை வடிவமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக, சிமென்ட் அளவு, ஜல்லியின் வகை ஆகிய காரணிகள் கான்கிரீட்டின் வெப்பத்தை பாதிக்கின்றன. எனவே பரிசோதனை அடிப்படையில் இந்த காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.கான்கிரீட் ஊற்றப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் அதன் அதிகபட்ச வெப்பநிலையை அடைகிறது. இந்நிலையில், சாதகமான காற்றோட்டம் இந்த உயர் வெப்பநிலையை கணிசமாக குறைக்க உதவுகிறது.இச்சூழலில், கான்கிரீட் விரைவாக உறையாமல் தவிர்க்க, கான்கிரீட்டில் தண்ணீர் தெளித்தல், ஈரப்பதம் பராமரிக்கும் மூலப்பொருட்களை பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.கான்கிரீட்டின் வெப்பத்தை தணிப்பதற்கு பொதுவாக, இரண்டு வகையான கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.ஒன்று வேதியியல் கலவை, மற்றொன்று கனிமக் கலவை. வேதியியல் கலவைகள் கான்கிரீட் உறைவதை தாமதப்படுத்துகின்றன. இதனால், கான்கிரீட் வெப்பத்தை வெளியிடுவது தாமதமாகி, வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.இவ்வகையான கலவைகள் 'தாமதப்படுத்திகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை