பாரம்பரிய முறைக்கு மாற்றாக கம்பிகளை இணைக்கும் கப்ளர்
'கப்ளர்' முறை என்பது கட்டடங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய 'லாப்பிங்' முறைக்கு மாற்றாக இருக்கும் ஒரு இயந்திர இணைப்பு முறை. இதில், இரும்பு கம்பிகள் ஒன்றுக்கொன்று மேலே போட்டு கட்டாமல், 'கப்ளர்' என்ற சாதனத்தை பயன்படுத்தி, நேரடியாக இணைக்கப்படுகிறது. கப்ளர் என்பது, 'ரீ இன்போர்ஸ்மென்ட் பார்'கள் ஒன்றுக்கொன்று இணைக்க பயன்படும் ஒரு திருகு சாதனம் அல்லது 'மெக்கானிக்கல் ஸ்ப்லைஸ்' ஆகும். இது இழுவிசை அழுத்தம், கம்பி வெட்டப்பட்டதால் 'ஷியர்' போன்ற அழுத்தங்களை ஒரு கம்பியிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுகிறது. இந்த கப்ளர் முறையால் இடம் சேமிக்கப்படுகிறது; நீளமான 'லாப்' வேண்டாம். கம்பிகளின் நெரிசலை குறைக்கும். இரும்பு சேமிப்பு, கூடுதல் 'லாப்' நீளம் தேவையில்லை. வலிமையான இணைப்பு, முழு வலிமை கொண்ட தொடர்ச்சி கிடைக்கும். 'திரெட்டெட் கப்ளர்' எனப்படும் திருகு கப்ளர், இரண்டு கம்பிகளை சுழற்ற உதவும் 'ஸ்டாண்டர்ட் கப்ளர்', ஒரு கம்பி சுழல முடியாதபோது 'பொசிஷன் கப்ளர்', வேறு விட்டமுடைய கம்பிகளை இணைக்கும் 'டிரான்ஸிஷன் கப்ளர்' என நான்கு வகை கப்ளர்கள் உள்ளன. ஹைட்ராலிக் அழுத்தம் வாயிலாக, கப்ளரானது கம்பியில் பொருத்தப்படுகிறது. முன்பக்க பகுதிகளில் பயன்படுத்தப்படும் கப்ளரில், கம்பி விட்டு 'கிரவுட்' நிரப்பப்படும். இதில், IS 16172:2014 (மெக்கானிக்கல் ஸ்பைல்ஸ் பார் ரீபார்ஸ்), ACI 318, BS 8110 போன்ற கோடுகள் உள்ளன என்கிறார், 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் கண்ணன்.