உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டில் மின் செலவை குறைக்க என்ன செய்வது?

வீட்டில் மின் செலவை குறைக்க என்ன செய்வது?

நான் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு, கம்பி இணைப்புகளுக்கு 'திரெட்டிங் கப்லர்' முறையை பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்கள்; இது சரியான முறையா?-முத்து, வடவள்ளி.சரியான முறைதான். ஆனால், மிகவும் தரமான சி.என்.சி., முறையில் பரிந்துரைக்கப்பட்ட தொழில் நுட்பத்தில் உருவான, வெவ்வேறு வகையான கப்லர்கள் மற்றும் திரெட்டிங் முறைகள் உள்ளன. இவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்முறை திறன் அதிகம்; சற்று விலையும் அதிகம்.பால்கனியில் கிரில்லுக்கு பதில் 'டப்லான்' கண்ணாடி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது சிறந்த முறையா. அதன் ஆயுள் காலம் மற்றும் கடினத்தன்மை எப்படி இருக்கும்?-சுரேஷ், முல்லை நகர்.இவ்வகை கண்ணாடிகள் வேதியியல் மற்றும் வெப்பம் சார்ந்த செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, கடினமாக்கப்படுவதால் எளிதில் உடையாது. கண்ணாடிகள் பார்ப்பதற்கு அழகாகவும், நீண்ட நாட்களுக்கு நீடித்தும் இருக்கும். இதன் விலை, கிரில் விலையை விட சற்று கூடுதலாக இருக்கும்.பிளம்பிங் பைப் அமைக்க, பி.வி.சி., அல்லது யு.பி.வி.சி., இதில் எது சிறந்தது?- பழனியப்பன், சுந்தராபுரம்.இரண்டும் தனித்தனிச்சிறப்புடையது. பி.வி.சி., பைப்புகள் பொதுவாக ஈர்ப்பு ஓட்டம் உள்ள கழிவு நீரை கடத்துவதற்கும், அழுத்தம் இல்லாத நீரை கடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. யு.பி.வி.சி., பைப்புகள் சற்று அதிக அழுத்தத்துடன் கூடிய நீரை, கடத்துவதற்கு பயன்படுகிறது.எனது வீட்டுக்கு மின் செலவை குறைக்க, எந்த மாதிரி மின் சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்?-புவனா, குனியமுத்துார்.முதலில் தரமான ஒயர்கள் சுவிட்சுகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை, பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு அறைக்கும், தனித்தனி மின் இணைப்பு கொண்ட சர்க்யூட்களை முறையான அளவீடுகளில் 'கிரவுண்ட் எர்த்' உடன் இணைக்க வேண்டும்.எல்.இ.டி., லைட்டுகள், 'ஸ்டார் ரேட்' மின் சாதன பொருட்களை பயன்படுத்தும் பொழுது, மின்சாரத்தை மேலும் சேமிக்கலாம்.நான் எனது வீட்டை, தற்போது கட்டத் துவங்கியுள்ளேன். இதில், முன் வாசல் கதவிற்கு மரக்கதவு பயன்படுத்தலாமா அல்லது 'ஸ்டீல் டோர்' அதை பயன்படுத்தலாமா ?- நஸ்ரின், உக்கடம்.நாம் அனைவரும் பல காலமாக, மரத்திலான கதவுகளை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், தற்பொழுது ஸ்டீல் டோர், பல வெளிநாடுகளில் இருந்து நல்ல தரமான கதவுகளை சில நிறுவனங்கள் தருகின்றன.இக்கதவில் அதிகமான லாக்குகள், ஒரே நேரத்தில் செயல்படுத்துவதால் அதன் உறுதி மற்றும் பாதுகாப்பு அதிகமாக உள்ளது. இதன் விலை தேக்கு மர கதவை விட,சற்று குறைவாகவே இருக்கும்.இவற்றை மெயின் டோர் மற்றும் வெளிப்புற கதவுகளுக்கும் பயன்படுத்தலாம். இதனால் 'எக்ஸ்ட்ரா கிரில் கேட்' போட வேண்டிய அவசியம் இல்லை.இவை பாலிஷ் செய்து வருவதாலும், மரக்கதவுகளைப் போன்ற அமைப்பில் உள்ளதாலும், அழகாகவும் இருக்கும்.-ராமலிங்கம், துணை தலைவர்,கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி