உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / தண்ணீர் தொட்டி தேர்வு செய்வதில் கவனம்

தண்ணீர் தொட்டி தேர்வு செய்வதில் கவனம்

வீடு கட்டுவதில் சரியான திட்டமிடல் இல்லையேல், பிற்காலத்தில் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி மன ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கட்டடங்களில் உள்கட்டமைப்பு மட்டுமின்றி வெளி கட்டமைப்பிலும், அதிக கவனம் செலுத்த வேண்டும்.தண்ணீர் தொட்டி என்பது அத்தியாவசியமான ஒன்று. மாடியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான தேர்வில் 'பிளாஸ்டிக் டேங்க்' மற்றும் 'கான்கிரீட் டேங்க்' ஆகிய இரண்டுக்கும் வித்தியாசமான சிறப்பம்சங்கள் உள்ளன. இடவசதிக்கு ஏற்ப பொருந்தியதை, நாம் தேர்வு செய்ய வேண்டும்.பொதுவாக கான்கிரீட் தொட்டிகள், பெரிய கொள்ளளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. வெப்பம் மற்றும் காலநிலை மாறுபாடுகள் அதிகம் உள்ள இடங்களில், கான்கிரீட் தொட்டி மிகசிறந்த தேர்வு. கான்கிரீட்டில் தண்ணீர் தொட்டி கட்டும்பொழுது, வீட்டுக்கான முன்தோற்றம் அழகாக இருக்கும்.அதேசமயம், சில வருடங்களில் விரிசல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், பழுது பார்ப்பது மிகக்கடினமான ஒன்று.அச்சமயத்தில் வீட்டுக்கான தண்ணீர் வசதிகளை செய்வதற்கு, மாற்று ஏற்பாடுகள் செய்ய நேரிடும். சின்டெக்ஸ் டேங்க் மூன்று அடுக்குகளாக தயாரிக்கப்படுகிறது.இதன் உள்பகுதி, நீருக்கும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். செலவும் குறைவாக இருக்கும். சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் மிகவும் எளிதானது.மிக பெரிய சுமையை, மாடியின் தளத்தில் குறைக்க உதவுகிறது. அதேசமயம் இரண்டுக்குமான ஆயுளிலும் வித்தியாசம் இருக்கும் என்கின்றனர் பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை