உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / நஞ்சை, புஞ்சை வேறுபாடு தெரியாமல் நிலம் வாங்குவது நல்லதல்ல!

நஞ்சை, புஞ்சை வேறுபாடு தெரியாமல் நிலம் வாங்குவது நல்லதல்ல!

சொ ந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் இலக்கிய அடிப்படையில் நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பயன்பாடு ரீதியாக நிலங்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. நில நிர்வாக அடிப்படை யில் இதற்காக வகைப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதை சரியாக புரிந்து மக்கள் செயல்பட வேண்டும். இதில் சொத்து வாங்கும் போது அதற்கான ஆவணங்களை சரி பார்க்கும் போது நஞ்சை, புஞ்சை என்று குறிப் பிடுவதை பார்த்து இருக்கலாம். இந்த வகைப்பாடுகளுக் கான அடிப்படை காரணங்கள் என்ன என்பதை மக்கள் சரியாக புரிந்து செயல்பட வேண்டும். பொதுவாக ஒரு நிலம் நஞ்சை என்று குறிப்பிடப்பட்டு இருந்தால், அதில் கிணறு அல்லது ஆற்று பாசனத்துக்கான வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். இதில் ஆண்டுக்கு மூன்று போகம் வரை விவசாயம் மேற்கொள்ளப்படும். முறையான நீர்ப்பாசன வசதி இருப்பதால், இங்கு தொடர்ந்து விவசாயம் நடக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த நிலங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு வாங்கும் போது முறையாக வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவ்வகை நிலங்களை விவசாய பயன்பாட்டுக்காக வாங்கும் போது பிரச்னை இல்லை. இதே போன்று, போதிய பாசன வசதி இன்றி, மழை நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலங்கள் புஞ்சை என்று வகைப்படுத்தப்படுகிறது. இதில் ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே விவசாயம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு வகை நிலங்களில் பெரும்பாலானவை தனியார் பெயரில் பட்டா கொடுக்கப்பட்டு இருக்கும். முறையான விற்பனை பத்திரமும் அதற்கு இருக்கும் என்பதன் அடிப்படையில் இந்த நிலங்களை வாங்குவது குறித்து மு டிவு செய்யலாம். இதில் குடியிருப்பு திட்டங்களில் நஞ்சை நிலம் நேரடியாக பயன்படுத்தப் பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். இதில் பழைய ஆவணங்கள் விவசாய நிலமாக இருக்கும் போது அதை முறையான வகைப்பாடு மாற்றம் செய்யப் படாமல் மனையாக வாங்கும் நிலையில் சட்ட ரீதியாக பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் ரியல் எ ஸ்டேட் சொத்து மதிப்பீட்டா ளர்கள். நஞ்சை, புஞ்சை நிலங்கள் பெரும்பாலும் தனியார் பெயரில் பட்டா நிலங்களாக இருக்கும் என்றாலும், அவை முறையான மனைகளாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே வீடு கட்ட பயன்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை