உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / உறவினர் குடியிருக்கும் வீட்டை வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள்!

உறவினர் குடியிருக்கும் வீட்டை வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள்!

பழைய வீடு வாங்குவோர், அந்த வீட்டில் தற்போது யார் வசித்து வருகிறார் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக, அந்த வீட்டில் விற்பவர் குடியிருக்கிறாரா அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளதா என்று பார்ப்பது அவசியம்.இதில், பெரும்பாலும், உரிமையாளரே குடியிருப்பார், என்பதால் விற்பனைக்கு பின் அவர் எப்போது காலி செய்வார் என்பதை, கவனமாக பார்க்க வேண்டும்.பொதுவாக, உரிமையாளர் மட்டும் குடியிருந்தால் பத்திரப்பதிவு முடிந்ததில் இருந்து மூன்று மாதங்கள் வரை அவகாசம் கேட்பர். உரிமையாளர்களுக்கு இவ்வாறு அவகாசம் கொடுப்பதில் என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது என்று, பலரும் நினைக்கலாம்.அதுவும், சொந்த வீட்டில் இருந்தவர்கள் வேறு நல்ல வீடு பார்த்து குடியேற வேண்டுமே என்று தான் பலரும் நினைக்கின்றனர். இதன்படி, பல உரிமையாளர்கள் சரியாக நடந்து கொள்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.அதே நேரத்தில் சிலர், பத்திரப்பதிவுக்கப் பின் வீட்டை ஒப்படைப்பதில் அடாவடி செய்வதும் நடக்கிறது. குறிப்பாக, உரிமையாளர் விற்பனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இருப்பார். ஆனால், அவரது குடும்பத்தினர், கடைசி நேரத்தில் இந்த வீட்டை விட்டு வர முடியாது என்று பிரச்னை செய்வர். சில இடங்களில் உரிமையாளர், தன் உறவினருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு இருப்பார். இதில் உரிமையாளர் விற்பனை செய்தபின், காலி செய்வதாக முதலில் அந்த உறவினர் உறுதி அளித்து இருப்பார்.ஆனால், விற்பனை முடிந்த பின், வீட்டை காலி செய்யாமல் அடாவடி செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அந்த வீடு பரம்பரை சொத்து தொடர்பானது என்றால், வழக்கு தொடர்வேன் என்றும் அவர் பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது.எனவே, பழைய வீட்டை வாங்கும் போது, அதை எப்படி ஒப்படைப்பு பெறுவது என்பதை பத்திரப்பதிவுக்கு முன்பே, தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான ஆலோசகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை