உள்ளூர் செய்திகள்

18 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் லீலாவதிக்கு, வயது 48. இரண்டு குழந்தைகள், கணவர் என, அழகான குடும்பம். திடீரென்று லீலாவதியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. காரணம், அவர் பலமுறை ரத்த வாந்தி எடுத்தது தான். என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள, 19 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் வந்தார். பரிசோதனையின்போது, அவருக்கு மண்ணீரலில் வீக்கம் இருந்தது. கல்லீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய் போர்டல் வெயினில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதற்கு, 'எக்ஸ்ட்ரா இப்படிக் போர்ட்டல் வீனஸ் அப்ஸ்ட்ராக் ஷன்' என்று பெயர். இப்பிரச்னைக்கு, 'எண்ேடாஸ்கோப்பி' பரிசோதனை மூலம், 'பாண்ட் லைகேஷன்' சிகிச்சை அளித்து, ரத்த வாந்தி எடுப்பது தடுக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், லீலாவதிக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. உடலில் ரத்த அணுக்கள் குறைய துவங்கின. ரத்த சோகை ஏற்பட்டு, பல் ஈறுகளிலிருந்தும், மற்ற உறுப்புகளிலிருந்தும், ரத்தம் கசிய துவங்கியது. பொதுவாக, ஹீமோகுளோபின் அளவு, 15 கிராம் இருக்க வேண்டும். ஆனால் லீலாவதிக்கோ, ௨.௯ கிராம் மட்டுமே இருந்தது.ரத்தத்திலுள்ள விசேஷ அணுவான, 'பிளேட்லெட்' அளவு, பத்தாயிரத்திற்கும் கீழ் இருந்தது. சராசரியாக இதன் அளவு, ௧.௫ லட்சம் முதல், 4 லட்சம் வரை இருக்க வேண்டும். பரிசோதனைகளின்போது லீலாவதிக்கு, 'ஹைப்பர் ஸ்பிலினிஸம்' என்ற வியாதி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அவரின் கல்லீரலை பரிசோதித்தபோது, அவருக்கு மஞ்சள் காமாலை (பிலிருபின் ௨௨ மி.கி.,) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஆர்.சி.பி., பரிசோதனையின்போது, 'போர்டல் பிலியோபதி' அதாவது, மண்ணீரலில் இருந்து வரும் ரத்த குழாய்கள், கல்லீரலில் இருந்து வெளிவரும் பித்தநீர் பாதையை அடைத்தது தான் காரணம் என, தெரிந்தது. இதற்கு, இ.ஆர்.சி.பி., முறையில், 'எண்டோஸ்கோபி' செய்து, பித்த குழாயில், ஒரு செயற்கை குழாயை பொருத்த வேண்டும். லீலாவுக்கு ரத்த அணுக்கள் மிக குறைவாக இருந்ததால், அந்த முறையையும் பயன்படுத்த முடியாது. அதனால், 'ஸ்பெனிக் ஆர்ட்ரிக் எம்ப்ளைசேஷன்' மூலம், மண்ணீரலின் வீக்கத்தை சுருக்கியதால், ரத்த அணுக்களின் நிலை சீரானது.அதன்பின், இ.ஆர்.சி.பி., சிகிச்சையின் மூலம், பித்தக் குழாயில் செயற்கை குழாய் பொருத்திய உடன், மஞ்சள் காமாலை, ஒரு மாதத்தில் சரியானது.ஆனாலும், மண்ணீரல் வீக்கமும், கல்லீரலுக்கு வரும் ரத்தக் குழாய் அடைப்பும் இருந்தன. அறுவை சிகிச்சையில், செயற்கை குழாய் மூலம் ரத்த அடைப்பை சரி செய்து, அவரது உடல் நிலை சீராக்கப்பட்டது.லீலாவின் விஷயத்தில் என்னை எது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால், என் மீது அவர் வைத்த அளவு கடந்த நம்பிக்கை தான். பின்னாளில், லீலாவதி கூறிய ஒரு வார்த்தை, என் மனதை அத்தனை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 'இன்றைக்கு உயிரோடு இருக்கிறேன் என்றால், அது மருத்துவர் தாயுமானவனால் தான். அவர் பெயரில் மட்டுமல்ல, உண்மையிலேயே எனக்கு தாயும் ஆனவர் தான்' என்றார் லீலா.- தாயுமானவன்,குடல் நோய் மற்றும் ஈரல் நோய் நிபுணர்drthayu55@gmail.comசென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்