உள்ளூர் செய்திகள்

இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2.5 லிட்டர் தண்ணீர்!

உடல் எடை சராசரியாக 60 - 65 கிலோ இருப்பவர்களுக்கு, சிறுநீரகச் செயல்பாடு இயல்பாக இருந்தால், 24 மணி நேரத்தில் 1,200 - 1,500 மில்லி சிறுநீர் வெளியேறும். இது கோடைக்காலம் என்பதால், வெளியேறும் சிறுநீர் அளவு குறையலாம். 1,500 மில்லி சிறுநீர் வெளியேற வேண்டும் என்றால், அதைவிட அதிகமாக 2,500 - 3,000 மில்லி திரவம் குடிக்க வேண்டும்.அதற்கு, நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி போன்ற பழங்கள், காய்கறிகள், மோர், இளநீர், நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் தவிர, வியர்வை வழியாகவும், சுவாசக் காற்றிலும் 500 - 750 மில்லி வரை நீர் வெளியேறலாம். மேலும், 24 மணி நேரத்தில் 2,500 மில்லி அளவு திரவ ஆகாரம் எடுத்துக் கொண்டால், வெளியேறும் சிறுநீர் அளவு 1,200 மில்லி இருக்கும்.இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் திரவ ஆகாரம் குறைவாக குடிக்க பரிந்துரைப்போம். இவர்கள், 1,500 - 2,000 மில்லி திரவ ஆகாரம் குடிப்பதால், அதிகமாக தொந்தரவு இருக்காது.போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகத் தொற்று ஏற்படும்.சிலருக்கு அடர்த்தியாக இருந்தால் சிறுநீரகப் பாதிப்பு இருக்கலாம். சிறுநீரகக் கோளாறு இருந்தால், சிறுநீரில் புரதம் வெளியேறும். இதனாலும் அடர்த்தியாகலாம். இதற்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.டாக்டர் எம்.தீபக், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், எஸ்.ஆர்.எம். மருத்துவமனை,சென்னை96444 96444 info@srmglobalhospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்