ஒரு கப் தயிரில் 30 ஆயிரம் பாக்டீரியாக்கள்!
தொற்று நோய்களின் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய மழைக் காலத்தில், இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து, ஆற வைத்தே குடிக்க வேண்டும்; எந்த உணவாக இருந்தாலும், வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும்.புரதம்பருப்பு, காளான், முளை கட்டிய பயறு, சோயா பீன்ஸ், சுண்டல் வகைகள், முட்டை, மீன், கோழி இறைச்சி போன்ற புரதச் சத்து மிகுந்த உணவுகளில், ஏதாவது இரண்டு தினமும் உணவில் இடம் பெற வேண்டும்.பழங்கள்சளி தொல்லை வரும் என்று பழங்களை தவிர்த்து விடாமல், எந்தப் பழங்கள் சாப்பிட்டால் பிரச்னை வருகிறது என்று தெரிந்து, அதை மட்டும் தவிர்க்கலாம். லேசாக ஜலதோஷம் பிடிக்கிறது என்பதற்கெல்லாம், பழங்களை தவிர்க்க வேண்டியதில்லை. பழச்சாறைத் தவிர்த்து, முழு பழங்களாகவே சாப்பிட வேண்டும்.தயிர்மழைக் காலம் முழுதும் தயிரை தவிர்த்து விடுகிறோம்; இதுவும் தவறான அபிப்ராயம். வீட்டிலேயே சுத்தமாக தயிர் வைத்து சாப்பிடுவதால், எந்தப் பிரச்னையும் வராது. 'புரோ - பயாடிக்' என்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், ஒரு கப் தயிரில், 30 ஆயிரம் வரை உள்ளது; இது, தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.இந்த பருவத்தில் ஏதோ ஒன்று சூடாக சாப்பிட, குடிக்கத் தோன்றும். இதற்கு சிறந்த தேர்வு, காய்கறி சூப். காய்கறிகளை நன்கு வேக வைத்து, மசித்து, வடிகட்டாமல், மிளகு, உப்பு துாவி குடித்தால் நல்லது. பஜ்ஜி, போண்டா சாப்பிடுவது தேவை இல்லை.எலுமிச்சைநான்கு டம்ளர் எலுமிச்சை சாறு தயாரிக்க, நான்கைந்து எலுமிச்சம் பழங்களின் சாறு பயன்படுத்தினால், அதிக புளிப்பால், தொண்டையில் பிரச்னையை ஏற்படுத்தும். அதை விடுத்து, ஒரு எலுமிச்சம் பழச்சாறில், நான்கு டம்ளர் பழச்சாறு தயாரித்தால், எந்தப் பிரச்னையும் வராது.ஐஸ் கிரீம்எளிய முறையில் வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து, சாப்பிட்டுக் கொள்ளலாம்.டாக்டர் தாரிணி கிருஷ்ணன்,நியூட்ரிஷனிஸ்ட், சென்னை.dhar.krish@gmail.com