இளம் வயதினரை தாக்கும் சர்க்கரை கோளாறு!
மிதமான கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், ஒரு ஆண்டிற்கு பின், சர்க்கரை கோளாறு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இரண்டு லட்சம் பேரை ஆய்வு செய்ததில், வைரஸ் தொற்றுக்கு முன், மரபியல் ரீதியிலோ, வேறு வகையிலோ சர்க்கரை கோளாறு வரக்கூடிய வாய்ப்பு இல்லாத 40 சதவீதம் பேருக்கு, 'டைப் - 2' சர்க்கரை கோளாறு இருந்தது. இதய கோளாறு, சிறுநீரக பிரச்னைகள், பக்கவாதம் வரும் வாய்ப்பும், கொரோனா பாதிப்பிற்கு பின் பலருக்கு இருக்கிறது.மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற அவசியம் இல்லாத, லேசாக அறிகுறிகள் இருந்தவர்களில் 1,000த்தில் எட்டு பேருக்கு சர்க்கரை கோளாறு இருக்கிறது. இளம் வயதினருக்கே அதிக பாதிப்பு உள்ளது.- ஹார்ட் அண்டு டயாபடீஸ் இன்ஸ்டிடியூட், மெல்போர்ன்,ஆஸ்திரேலியா.