டோபமைன் சுரப்புக்கு எளிய வழி!
நரம்பு செல்களுக்கு இடையில், தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவது, மூளையில் சுரக்கும், 'டோபமைன்' என்ற வேதிப் பொருள் தான். மகிழ்ச்சி, திருப்தி போன்ற நேர்மறை உணர்வுகளைத் தருவதும் இதுவே!உடல் பருமனால், டோபமைன் சுரப்பது குறையும். போதுமான அளவு சுரக்காவிட்டால், எவ்வளவு தான் சாப்பிட்டாலும், சாப்பிட்ட திருப்தியே கிடைக்காது. இதனால், தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு, உடல் எடை அதிகரிக்கிறது. இயற்கையாக இந்த ஹார்மோன் சுரப்பதற்கு, எந்த வேலை செய்தாலும் முழு மனதோடு, மனது ஒன்றி ஈடுபாடுடன் செய்ய வேண்டும். இசை, சினிமா, கிரிக்கெட் என்று பிடித்த விஷயங்களில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணராமல் ஒன்றி விடுவோமோ, அதைப் போன்று எல்லா காரியத்திலும் இருக்க வேண்டும்.- நியூரோ சயின்ஸ்