உள்ளூர் செய்திகள்

அலோபதி - ஸ்டாட்டின் மாத்திரை: ஆயுள் காப்பதா? ஆபத்தானதா?

முழு முதலான பக்க விளைவு, மறதி. அடுத்ததாக, மனக் குழப்பம். பெயர்கள், வார்த்தைகள் மறந்து போதல், விரல் நுனிகள் மரத்து போதல், செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, கவனம் சிதறல், தசைகள் வலுவிழத்தல், தசைகளில் வலி ஏற்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.இதய நோயாளிகளுக்கு, அலோபதி மருத்துவத்தில் கொடுக்கப்படும் அருமருந்தாகக் கருதப்படுவது, ஸ்டாட்டின் மாத்திரை. ரத்தத்தில் கலக்கும், அதிக அளவு கொழுப்பு உற்பத்தி ஆவதையே தடுக்கும் திறன் பெற்றது, இந்த மாத்திரை. கொழுப்பை உற்பத்தி செய்ய உதவும் ரசாயனம், கல்லீரலில் சுரக்கிறது. இந்த ரசாயனத்தைச் செயலிழக்கச் செய்வது தான், ஸ்டாட்டின் மாத்திரையின் பணி.கொழுப்புச் சத்தின் பங்குஉடலின் செல் வளர்ச்சி மற்றும் உடல் நல்ல விதமாய் செயல்பட, கொழுப்புச் சத்து தேவை. ஆனால், அதுவே அதிக அளவில் உடலில் சேர்ந்தால், இதய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடும். எனவே, ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைத்து, இதய வலி, இதயச் செயலிழப்பு, பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது இந்த மாத்திரை.ஆனால், இந்த மாத்திரை, அதிக அளவு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என, மாத்திரையை நெடுநாளாகப் பயன்படுத்தி வந்த, கிறிஸ்டோபர் ஹட்சன் என்பவர் கூறுகிறார். இவருடைய அனுபவம் முழுவதும், கட்டுரை வடிவில், லண்டனிலிருந்து வெளியாகும், 'தி டெய்லி டெலிகிராப்' என்ற நாளிதழில் வெளியாகியது.இதைப் படித்த பலரும், மிக்க அதிர்ச்சி அடைந்தனர். தாங்களும், ஸ்டாட்டின் மாத்திரை பயன்படுத்துவதாகவும், தங்களுக்கும் அந்த பாதிப்புகள் அனைத்தும் தென்படுவதாகவும், இவருக்கும், நாளிதழுக்கும், நாளிதழின் வெப்சைட்டுக்கும் கடிதம் எழுதிக் குவித்து விட்டனர்.இங்கிலாந்தில்...இங்கிலாந்தில், 45 வயதைக் கடந்த மூவரில் ஒருவர், கண்டிப்பாய் இந்த மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை, 70 லட்சத்தைத் தாண்டும். அப்படி எனில், உலக அளவில் இந்த மாத்திரையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, நிச்சயமாய், பல கோடிகளைத் தாண்டும். இங்கிலாந்தில், 7 லட்சம் பேருக்கு, இந்த மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது.என்ன பக்க விளைவு?முழு முதலான பக்க விளைவு, மறதி. அடுத்ததாக, மனக் குழப்பம். பெயர்கள், வார்த்தைகள் மறந்து போதல், விரல் நுனிகள் மரத்து போதல் ஆகியவை ஏற்படுகின்றன. கவனம் சிதறல், செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, தசைகள் வலுவிழத்தல், தசைகளில் வலி ஏற்படுதல் ஆகியவையும் ஏற்படுவதாக, கிறிஸ்டோபர் ஹட்சன் கூறுகிறார்.அபார ஞாபக மறதிஅவர் கூறியதாக, 'தி டெய்லி டெலிகிராப்' நாளிதழில் வெளியான விவரம்:லண்டனில் உள்ள மருத்துவரான என் உறவினருக்கு, இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு இந்த சிகிச்சை செய்ததற்கான காரணமே, ஸ்டாட்டின் மாத்திரை சாப்பிடுவது தான் என, அவர் கூறுகிறார்.நினைவுத் திறனைப் பொறுத்தவரை, நம்முடைய மொபைல் போன் எண், நமக்கே மறந்து விடும். 62 வயது நிரம்பியவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 20 ஆண்டுகளாக அவர், ஸ்டாட்டின் மாத்திரை சாப்பிடுவதாகவும், தனக்கு மறதி நோய், தசை வலி, நினைவுத் திறன் இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் திருமண நாள் கூட, தனக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளார்.இந்த பக்க விளைவுகள் குறித்து, மருத்துவ விஞ்ஞானிகள் கவனம் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.நம் நாட்டில், இந்த மாத்திரையின் புழக்கம் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது, மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்களுக்கு புகார்கள் வந்துள்ளனவா, இதை மருத்துவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்தெல்லாம், மருத்துவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !