வலி நிவாரண மாத்திரைகள் நல்லதா?
வலி நிவாரண மாத்திரைகளை, நாமாகவே உட்கொள்ளலாமா?பி.குமார், தேனிஆஸ்பிரின், பாரசிட்டமால் போன்ற வலி நிவாரண மாத்திரைகள், மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை, மருத்துவர் பரிந்துரை இன்றி, நாமாகவே உட்கொள்ளக் கூடாது. கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் பாரசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதற்கு முன்னும், ரத்தக் கசிவு, பெப்டிக் அல்சர் உள்ளவர்கள், ஆஸ்பிரின் சாப்பிடுவதற்கு முன்னும், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டும்.