அர்த்த மச்சேந்திர ஆசனம்
பொருள்:மச்சேந்திரர் என்ற மாமுனிவர், இந்த ஆசனத்தை செய்து, பலன் அடைந்ததால், அவருடைய பெயரே இவ்வாசனத்துக்கு நிலைபெற்றது.செய்முறை:1. இரண்டு குதிகால்களின் மேல் உட்கார வேண்டும்2. பின், மெதுவாக வலது காலை, இடது கால் தொடைப் பகுதியை ஒட்டியவாறு வைக்க வேண்டும்3. வலது கை, உடம்பிற்கு பின்னால், உள்ளங்கை கீழே படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்4. அதன்பின், இடது கையை, வலது காலின் வெளிப் பக்கம் கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்க வேண்டும்5. மெதுவாக வலது பக்கம் திரும்பி, பார்க்க வேண்டும்6. ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும். இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும்.பயன்கள்:1. இடுப்பு சதை குறையும்2. 'ப்ராஸ்ட்ரேட்' சுரப்பி, நன்கு வேலை செய்ய உதவும்3. 'இன்சுலின்' சுரந்து, உடம்பில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்4. வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சரியாகும்5. சிறுநீரகம், நன்கு வேலை செய்ய உதவும்6. முதுகு வலி குறையும். ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053