உள்ளூர் செய்திகள்

புற்றுநோய் கழுத்து வலியை குறைக்கும் "கால்மேர் இயந்திரம்

மதுரை: ''புற்றுநோய், கழுத்து உட்பட பல்வேறு வலிகளில் இருந்து நிவாரணம் பெற, 'கால்மேர்' இயந்திரம் உதவுகிறது,'' என, மதுரை சாரிடபிள் டிரஸ்ட்டின் கீழ் இயங்கும் பத்மம் மருத்துவமனை டாக்டர் டி.என்.குப்புசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:வலிகளை நீக்கும், 'கால்மேர்' கருவியில், ஐந்து தனி சானல்கள் மூலம் 'எலக்ட்ரோடுகள்' பொருத்தப்பட்டுள்ளன. கருவியின் கீழ்ப்பகுதியில் நோயாளிகளுக்கு தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், 'ஸ்டிக்கர்கள்' உள்ளன. இ.சி.ஜி., மாடலில் வயர்கள் உடம்பில் பொருத்தப்பட்டதும், எலக்ட்ரோடுகள் மூலம் வலி இருக்குமிடத்திற்கு மின்காந்தம் செலுத்தப்படுகிறது.நாள்பட்ட வலி, மருந்து, ஊசி மூலம் நீங்காத வலிகளுக்கு நரம்புகளைத் தூண்டிவிடப்படுகிறது. எதனால் வலி வருகிறது என்பதை பொறுத்து, வலி துவங்கும் இடத்திலிருந்து, ஒருநாளைக்கு 30 நிமிடங்கள் சிகிச்சை தரப்படுகிறது. வலியின் தன்மைக்கேற்ப, சிகிச்சை நாட்கள் மாறுபடும். புற்றுநோய்க்கு தரப்படும் 'கீமோதெரபி' யால் உண்டாகும் வலியை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி, முதுகுவலி, அக்கியால் உண்டான நாள்பட்ட நரம்புவலி, முகவாத வலி உட்பட பல்வேறு வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நியூயார்க்கில் வலி தொடர்பான மருத்துவக் கருத்தரங்கில் 'கால்மேர்' இயந்திரத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டன. நோயாளிகளை ஆய்வு செய்ததில், வலி குறைந்ததாக கூறியுள்ளனர், என்றார்.போன்:94430 53730.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !