உள்ளூர் செய்திகள்

இரவில் காபி குடிக்கலாமா?

# தினமும் ஒரே நேரத்திற்கு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்துங்கள் # உறங்குவதற்கு முன் வெது வெதுப்பான பாலும், ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் சிறந்து செயல்படுகிறது# வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு உறங்கச் செல்லலாம்# உறங்கும் அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளுமையாகவும் இருக்கும் சூழலுக்கு கொண்டு வர வேண்டும்# மின்னணு உபகரணங்களை உறங்கும் அறையில் வைத்திருக்கக் கூடாது # இரவு, 7:00 மணிக்கு மேல், காபி குடித்தால் செரிமானத்தையும், தூக்கத்தையும் பாதிக்கும்# இரவு தூங்குவதற்கு முன், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் # இரவு தூங்கும் முன்னரே, அறையை சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டியது அவசியம். இது, சுவாச பிரச்னைகள் ஏற்படாது இருக்க உதவும்; நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.டாக்டர் கே.ஆர்.விஜய் சக்கரவர்த்திபொது நல மருத்துவர். 97513 10211


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்