உள்ளூர் செய்திகள்

"மூட்டுவலிக்கு "ஸ்டீராய்டு ஊசி போடலாமா

மூன்றாண்டுக்கு முன் நடந்த விபத்தில் தோள்பட்டை எலும்பு முறிந்தது. கடந்த ஒரு ஆண்டாக தோள் மூட்டில் வலி, வலுவின்மை, தானாக தோள்பட்டையை உயர்த்த முடியாமல் அவதிப்படுகிறேன். ஆறு மாதமாக பிசியோதெரபி செய்தும் பலனில்லையே?தோள்மூட்டில் ஏற்படும் சிக்கலான எலும்பு முறிவுகள் தோள்மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். சுற்றுப்பட்டை தசை இயங்காவிடில், பந்துக்கிண்ண மூட்டான தோள்மூட்டு லேசாக விலக ஆரம்பிக்கும். தோள்மூட்டின் அமைப்பும், வடிவமும் மாறிவிடும். தற்போது இதற்குள்ள தீர்வு, 'ரிவர்ஸ் சோல்டர் ரீப்ளேஸ்மென்ட்' என்கிற சிறப்பு தோள்மூட்டு மாற்று சிகிச்சை. வலியை முழுமையாக நீக்குவது மற்றும் பழுதடைந்த தசைகளுக்குப் பதிலாக மாற்று தசைகளை இயங்க வைக்க செய்வதும், இதன் சிறப்பு. இதனால் தோள்பட்டையை உயர்த்த முடியும். இச்சிகிச்சை முறை ஐரோப்பிய நாடுகளில், 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தியாவில், 2 ஆண்டுகளாக, சில மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐம்பத்தாறு வயதான, எனக்கு 10 ஆண்டுகளாக கணுக்கால் வலி உள்ளது. ஐந்தாண்டாக பாதத்தின் உள்பகுதியில் இருக்கும் வளைவு மறைந்து பாதம் தட்டையாக உள்ளது. நடக்கும்போது வலிக்கிறது. காலணி மாற்றங்கள் செய்தும் பயனில்லை. என்ன செய்வது?மத்திய வயதில் உள்ளவர்களுக்கு பாதம் தட்டையாக மாறினால் அதை 'அக்கொயர்டு அடல்ட் பிளாட் புட்' என்பர். கணுக்காலின் பின்னால் உள்ள தசைநார், சரியாக இயங்காததால் இது ஏற்படுகிறது. நாளடைவில் கணுக்கால் மற்றும் பின்குதிகாலில் உள்ள சிறுமூட்டுகளின் தேய்மானத்திற்கு வழிவகுக்கும். ஆரம்ப காலத்தில் தட்டையான பாதத்திற்கு என்றே சிறப்பாக செய்யப்படும் காலணிகள் அணிந்தால் நிவாரணம் கிடைக்கும். தேய்மானம் தீவிரம் என்றால் வலியை பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில மூட்டுகளை அசையமுடியாதபடி இணைய வைக்கும் டிரிப்பிள் பியூஷன் சிகிச்சையை செய்யலாம். வலி நிவாரணம் கிடைக்கும். பாதத்தின் வடிவத்திலும் நன்கு முன்னேற்றம் கிடைக்கும்.மூட்டு வலிக்கு மூன்றுமுறை, மூட்டில் ஸ்டீராய்டு ஊசி போடப்பட்டது. மூன்றாவது முறை அளித்த ஊசியால் பலனில்லை. மறுபடியும் மூட்டுஊசி எடுத்துக் கொள்ளலாமா? மூட்டில் அளிக்கப்படும் ஸ்டீராய்டு ஊசி, அடிப்படை பிரச்னையான ஜவ்வு தேய்மானத்தை சீராக்குவதில்லை. வீக்கத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தும். பலமுறை கொடுக்கப்படும்போது அதன் வீரியமும் குறைந்து செயல் இல்லாமல் போகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு என்பது மூட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைப்பதால் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. மூட்டில் கிருமிகள் தாக்கினால், மூட்டு மாற்று சிகிச்சையும் தோல்வி அடைய வாய்ப்பு உண்டு. மூட்டில் ஸ்டீராய்டு ஊசி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 98941-03259


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்