"ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி வருமா
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை*சிறுவயதில் எனக்கு முழங்கை எலும்பு முறிந்தது, பின் இணைந்து விட்டது. ஆனால் முழங்கையை நன்கு மடக்க முடிவதில்லை. எக்ஸ்ரே எடுத்த போது, முழங்கையை சுற்றி அதிக எலும்பு வளர்ந்துள்ளதாகவும், அதனால் மடக்க முடிவதில்லை என, டாக்டர் கூறுகிறார். இதற்கு தீர்வு உண்டா?முழங்கையை சுற்றிலும் அதிகமான எலும்பு வளர்ந்திருந்தால் அதை அகற்றினால், முழங்கையின் அசைவில் சற்று முன்னேற்றத்தை காணலாம். தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் இதை நுண்துளை சிகிச்சை வாயிலாக செய்ய இயலும். டாக்டரை கலந்து ஆலோசனை செய்யவும்.*இளம் வயது முதல் ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் எனக்கு, சமீப காலமாக இரண்டு மூட்டிலும் வலி உள்ளது. ஹைஹீல்ஸ் அணிவதால் இந்த வலி ஏற்படுகிறதா?மூட்டுவலி வர பல காரணங்கள் இருந்தாலும், ஹைஹீல்ஸ் அணிபவர்களுக்கு அதுவும் ஒரு காரணம்தான். ஹைஹீல்ஸ் அணிவோருக்கு உடலின் மையப்பகுதியில் இயற்கையாக இருக்கும் புவிஈர்ப்பு சக்தி முன்னோக்கி தள்ளப்படும். மூட்டினில் செல்லும் அழுத்தம் அதிகமாகும். மூட்டு மட்டுமின்றி, முதுகு, பாதம் பகுதிகளிலும் வலி ஏற்படலாம். முக்கியமான விழாக்கள் தவிர, மற்ற நேரங்களில் ஹைஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.*என் வயது 48. முழங்கால் மூட்டில் வீக்கம், மூட்டுநீர் தேக்கம் உண்டாகிறது. ஊசிபோட்டு இதுவரை 6 முறை நீர் அகற்றப்பட்டது. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ததில் இந்நோய் பி.வி.என்.எஸ்., எனக் கூறப்பட்டது. இதற்கு தீர்வு இல்லையா?பி.வி.என்.எஸ்., என்ற நோயில் மூட்டின் உறையில் இருந்து அதிகமான நீர் சுரக்கும் மற்றும் மூட்டின் உறை வீங்கி, மூட்டு பெரிதாக காட்சியளிக்கும். இவ்வாறு உள்ளவர்கள் 'சினோவெக்டமி' சிகிச்சை செய்தால் நோயை கட்டுப்படுத்தலாம். அதை மூட்டு நுண்துளை சிகிச்சையாலும் குணப்படுத்த முடியும்.*என் குழந்தையின் வயது 12. சில மாதங்களாக இடுப்பு மூட்டில் வலி உள்ளது. நடக்கும் போது வலி உள்ளதால் இயல்பாக கஷ்டப்படுகிறான். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ததில் அவனுக்கு 'Sufe' நோய் உள்ளதென டாக்டர் கூறுகிறார். இதற்கு சிகிச்சை உண்டா?இந்நோயில் இடுப்பு மூட்டின் தொடை எலும்பின் கழுத்துப்பகுதி, தலைப்பகுதியில் இருந்து விலகி வரும். இவ்வாறு விலகினால் இடுப்பு மூட்டு நாளடைவில் சீரழியத் துவங்கும். முதலில் காலில் எடை போ(கூ)டாமல் நடக்கவும், டாக்டரிடம் ஆலோசித்து சீரமைக்கவும், ஆரம்ப காலத்தில் அதைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் சீரமைப்பது நல்லது.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442 46436