உள்ளூர் செய்திகள்

கொரோனா வந்தால் தாய்ப்பால் ஊட்டலாமா?

இன்று, அனைவராலும் பேசப்படும் செய்தி கொரோனா; கேட்கப்படும் விஷயம், கொரோனா. இது, 'கோவிட் 19' என்ற வைரசால் வரும் தொற்று நோய் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். தனக்கு இருக்கும் மற்ற நோய்கள் கூட, பலருக்கும் மறந்து விட்டது.கொரோனா தொற்று நோயின் தாக்கம், உலகளாவிய அளவில் இருந்தாலும், நம் நாட்டு மக்கள் தொகையுடன் கணக்கிட்டால், நாம் சற்று பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம் என்பது விளங்கும். பாதுகாப்பு தேடுதல்எனினும், நம் நாட்டில், கொரோனா இறப்பு, சில இடங்களில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் காணப்படுகிறது. அதுபோல, இறந்தோர்களில், ஆண்களின் எண்ணிக்கையை விட, பெண்களின் இறப்பு வீதம், குறைவாகவே உள்ளது. இறந்த பெண்களின் எண்ணிக்கையில் கூட, 20 - 40 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் இறந்ததாக அறியப்படவில்லை. ஆனால், நாள்பட்ட நோயால் அவதிப்பட்ட, 50 - 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள், கொரோனா தாக்கி, இறந்துள்ளனர்.இது எதனால் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், சில உண்மைகள் நம் கண் முன் உதயமாகும். பெண்கள் பொதுவாகவே பயந்த சுபாவம் உள்ளவர்கள் தான். அதுவும், எளிதில் தொற்றிக் கொள்ளும் கொரோனா என்பதால், சற்று முன் எச்சரிக்கையாகவே இருப்பர்; ஆண்களைப் போல, அதீத தைரியத்தில் இருக்க மாட்டார்கள்.இந்த பயமே, பெண்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது போலும். பெண்களின் அடுத்த பொதுவான குணம், பாதுகாப்பு தேடுதல். கொரோனா வந்ததுமே, அரசு என்னென்ன விதிமுறைகளை செய்யச் சொன்னதோ, அவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தனர்.முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், வீட்டிலேயே விலகி இருத்தல், விழிப்புடன் இருத்தல், ஆவி பிடித்தல், மஞ்சள், மிளகு, இஞ்சி, துளசி சாறு பருகுதல் போன்றவற்றை கண்டிப்புடன் பின்பற்றினர். அடுத்து, பெண்களுக்கே இயல்பான குணமாகிய, 'பேசி தீர்த்து விடுதல்' என்பதை பின்பற்றினர். கை, கால்களை கழுவுதல், தொண்டை வறட்சி, இருமல், காய்ச்சல், தும்மல் இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காட்டிவிடு என, பிறருக்கு எடுத்துச் சொல்லும் பெண்கள், தங்களுக்கு இருந்தால், செய்யாமல் இருப்பரா...ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் கல்வி, ஒரு குடும்பத்தையே தாங்கி நிற்கிறது என்றால் மிகையாகாது. முழு அடைப்பின்போது, இயற்கை எத்தனை விதமான பாடங்களை நமக்கு கற்று தந்திருக்கிறது என்பதை, பரந்த மனதோடு பார்த்தால் தெரியும்.கொரோனா தொற்று நம் நாட்டிற்கு வந்த பின், மார்ச் இறுதியில் ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டது; இப்போது வரை தொடர்கிறது. மக்கள் வெளியில் செல்லாமல் இருப்பதால், வாகனங்கள் ஓடாமல் இருப்பதால், பல நல்ல நிகழ்வுகளும் இயற்கையாக நடந்துள்ளன.ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் மாசு குறைந்து உள்ளது. சுற்றுப்புறங்களில் குப்பை குறைந்துள்ளது; சப்தம் குறைந்துள்ளது; ஜன நெரிசல் குறைந்து உள்ளது. அதனால், மயில், குயில், மான், குருவி, மைனா போன்ற பறவைகளின் ஒலி கேட்கிறது.தன் கணவர், ஒரு நாள் கூட, வீட்டில் முழுதாக தங்குவதில்லையே என்ற கவலை, பெண்களுக்கு பொதுவாக உள்ள ஏக்கம். அதை, கொரோனா போக்கி விட்டது. அலுவலகம் செல்லாமலே, வீட்டில் இருந்தபடி கணவர் அலுவலக வேலை செய்கிறார் என்ற நிலை, பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இது, ஒரு புறம் இருந்தாலும், பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகாமலே தேர்வாகின்றனர். ஆனால், நாங்கள் மட்டும் சமையல் அறைக்கு போகாமல் இருக்க முடியலையே என்ற ஆதங்கமும், ஒரு புறம் பெண்களுக்கு இருக்கிறது.பெண்கள் இந்த முழு அடைப்பு நேரத்தில், நல்ல உடற்பயிற்சி செய்யவும், சரியான நேரத்தில் சத்தான உணவு உட்கொள்ளவும், நன்றாக துாங்கவும், 'டென்ஷன்' இல்லாமல் இருக்கவும் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது எனலாம். பெண்கள் நேர்த்திக் கடன் செய்து, வெற்றிகரமாக விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு சிலரின் வீட்டில், வாரம், ஏழு நாட்களும் விருந்தினர் என்ற நிலை இருக்கும். அதற்கும் கொரோனா ஓய்வு கொடுத்திருக்கிறது.பல வீடுகளில், வீட்டு வேலை செய்வோரை அனுமதிக்காததால், வீட்டில் உள்ள பெண்களே, அந்த வேலைகளைச் செய்வதால் உடல் சற்று ஆரோக்கியமாகவும், மெலிந்தும், அழகாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இளம் பெண்கள், கல்லுாரியில் படிக்கும் பெண்களுக்கு இதுவரை அடுப்படி போகாதவர்கள் கூட, சில நேரம் எட்டிப் பார்க்கவும், அம்மாவுக்கு உதவி செய்யவும், 'யு - டியூப்' சமூக வலைதளம் பார்த்து, புதுப் புது சமையல் செய்முறைகளை முயற்சி செய்து பார்க்கவும், கொரோனா சந்தர்ப்பத்தை நல்கிஉள்ளது எனலாம்.பலவீனம்இது ஒரே அலுப்பாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள் ஒருபுறம். அம்மாக்கள் எப்படி, அயராது மணிக்கணக்காக பணி புரிகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வழி வகுத்தது, கொரோனா காலம்.சில இளம் பெண்களின் காதல், கல்யாண வைபவங்கள் சற்று தள்ளிப் போனது குறித்த கவலை, பெண்களுக்கு எழலாம். கோலாகலமாக நடக்க வேண்டிய திருமணம், வெறும், 100 பேரை வைத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து ஒரு புறம் கவலை இருந்தாலும், சிக்கனமாக திருமணம் நடைபெற, தம்பதியர் கடன் தொல்லையில் மாட்டிக் கொள்ளாதவாறு கொரோனா காலம் வழி வகுத்துள்ளது.அதையும் பெண்கள், புத்திசாலித்தனமாக, தாம்பூலமாக முக கவசம், கிருமி நாசினி, கைகுட்டை, சோப்பு போன்றவற்றை கொடுத்து வழியனுப்பும் பழக்கத்தையும், புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க, இந்த முழு அடைப்பு காலம் பெரும் உதவியைச் செய்து உள்ளது. வெளியே செல்வதை தவிர்த்து, புதிய தொற்றுக்கு ஆளாகாமல், நேரத்திற்கு வீட்டு சமையல் உட்கொண்டு, ரசாயன பொருட்களை தவிர்த்து, ஆரோக்கிய உணவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளவும், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கவும் மறைமுகமாக கொரோனா வழிவகை செய்துள்ளது.இப்படி ஒரு புறம் இருந்தாலும், பாலுாட்டும் தாய்மார்களுக்கு சில சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன.முதல் வாரத்தில் சுரக்கும் பாலான, சீம்பால், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பால் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நேரத்தில் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவள் தன் குழந்தைக்கு, முதல் ஒரு வாரம் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை உருவாகும். ஒரு வேளை, தும்மல், இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தாய்க்கு இருந்தாலும், குழந்தையின் நலனைக் கருதி, நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு, குழந்தையை தனிமைப்படுத்தி கவனிக்க வேண்டி வரும். பிரசவத்திற்குப் பின், அவளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதால், அவளின் உறவுக்காரர்கள், தாய், தந்தை, நண்பர்கள் அனைவருமே, உடனே வந்து பார்ப்பது தவிர்க்கப்படும்.இது, கொரோனா காலம் என்பதால், பெண்கள் இதை கவனத்துடன் அணுகுவது நல்லது. பாலுாட்டும் பெண்களுக்கு மேற்கூறிய எவ்வித அறிகுறிகளும் இல்லாத பட்சத்தில், குழந்தைக்கு பாலுாட்டலாம். முக கவசம் தேவைப்பட்டால் மட்டுமே அணியலாம்.தனி அறைஇல்லையெனில், தேவையான பிராண வாயு சுவாசத்தின் மூலம் கிடைக்காவிட்டால் தலைவலி, மூளைச் சோர்வு, மூச்சு முட்டல், பலவீனம் போன்றவை தோன்றலாம். பிரசவித்த உடனே, தாய்க்கு கொரோனா தொற்று கண்டால், சுகாதார முறையில் தாய்ப்பாலை எடுத்து, தனி அறையில் குழந்தைக்கு ஊட்டலாம்.மேலும், தாய்மார்கள் தங்கள் பிராண வாயுவின் அளவை பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம். முதியோர்களை கவனித்து கொள்ளும் முழு பொறுப்பும் பெண்களுக்கு உண்டு. கொரோனா வராமல் தடுக்க, அரசு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைக்கும், கபசுர குடிநீர் மற்றும் 'ஆர்சனிக்கம் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தி, இரவில், குளிர்ந்த பொருட்கள் உட்கொள்வதை தவிர்த்து, சூடான பானங்களை மட்டுமே பருகி, வாய், தொண்டை போன்றவற்றை, உணவு உண்ட உடனே கழுவி, உப்பு நீரில் கொப்பளித்து விடுவது நல்லது.மொத்தத்தில், கொரோனா தொற்று, பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் ஒரு விதத்தில் உதவி செய்துள்ளது. எப்படி எனில், முழு அடைப்பு நேரங்களில், பெண்கள் வெளியே, 'ஷாப்பிங்' செய்யும் செலவு, பெட்ரோல் செலவு, வீணாக ஓட்டலுக்குச் செல்வது, அனாவசியமாக துணிமணிகள், நகைகள் வாங்குவது போன்ற செலவுகள் குறைந்துள்ளன.இயற்கையும், பெண்களுக்கு இரக்கம் காட்டுவது பாராட்டத்தக்கது. இயற்கை எதை நமக்கு கொடையாக தருகிறதோ, அதை நாம் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். குணம் நாடி, குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்பது, கொரோனா முழு அடைப்பு காலத்திற்கும் பொருந்தும்!டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம்மருத்துவ அதிகாரி (ஓய்வு),சென்னை மாநகராட்சிதொடர்புக்கு:மொபைல் எண்: 98415 55955


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்