உள்ளூர் செய்திகள்

கேன்சரை தூண்டும் உணவு!

உணவுக்கும், கேன்சர் பாதிப்பிற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக, பல்வேறு நிலைகளில் செய்யப்பட்ட சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.கடந்த, 20 ஆண்டுகளில், துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது அதிகரித்துள்ள நிலையில், செரிமான மண்டலம் தொடர்பான கேன்சரால், பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. சாப்பிடும் உணவு, மரபணுவில் சிதைவை எப்படி ஏற்படுத்துகிறது என்பது குறித்து, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகள், பொரித்த, வறுத்த உணவுகளில், பார்த்தவுடன் சாப்பிட துாண்டுவதற்காக, பல நிறங்களில் வேதிப் பொருட்களை சேர்க்கின்றனர். அதிக நாட்கள் கெடாமல் வைப்பதற்கும், பல வேதிப் பொருட்கள் சேர்க்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும், ரத்த நாளங்களில் அழிவை ஏற்படுத்துபவை.தென் மாநில மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று கோழிக்கறி.நுாற்றுக்கணக்கான விதங்களில், நிறங்களில் சிக்கன் தயாரித்து விற்கின்றனர்.உள்பக்கம் சதைப்பற்றாக, வெளியில் மொறுமொறுவென்று, கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருந்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் சாப்பிட துாண்டும் விதமாக, பல்வேறு விதமான செய ற்கை உப்பு, சர்க்கரை, வகை வகையான, 'சாஸ்' பயன்படுத்தி செய்கின்றனர்.குறிப்பிட்ட உணவை குழந்தை விரும்பி சாப்பிடுகிறது என்பதற்காக, அதை மட்டும் தருவது தவறு. சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை உடம்பால் பயன்படுத்த முடியாது. நாம் தொடர்ந்து அதையே சாப்பிடும் போது, என்ன செய்வது என்று தெரியாமல், ஆங்காங்கே சேமித்து வைத்து விடும். உடல் பருமனுக்கான முக்கிய காரணமும் இது தான்; கேன்சரை உண்டாக்கும் காரணியும் இது தான்.டாக்டர் வீரய்யா சுரேந்திரன், மருத்துவ ஆலோசகர், அடையாறு கேன்சர் மையம், சென்னை. 044 - 2491 1526


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்