உள்ளூர் செய்திகள்

வயதுக்கு தகுந்த எடையில் குழந்தை பராமரிப்பு

* என் குழந்தை நன்றாக பசித்து உணவை உட்கொள்கிறது. ஆனாலும் வயதுக்கு தகுந்த எடை இல்லை. இது என்னவாக இருக்கலாம்?இதை 'மால் அப்சார்ப்ஷன்' என்று கூறுவர். நாம் உண்ணும் உணவுப் புரதம் மற்றும் இரும்பு சத்துக்கள் எல்லாம் அந்தந்த உறுப்புகளில், அதாவது கல்லீரலில் தேக்கமடைய வேண்டும். அதைத்தான் 'Liver Strorage' என்று கூறுவர். கல்லீரல் தேக்கமானது ஒழுங்காக இருந்தால் தான் இரும்பு மற்றும் புரதம் ரத்தத்தில் கலந்து தசைகளாக மாறிவிடும். கல்லீரலில் தேக்கமடையும் தன்மை குறைவாக இருந்தால் குழந்தையின் எடை கூடாது. அது 'மால் அப்சார்ப்ஷன்' குறைபாடு காரணமாகும். இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.* எடை கூடாமல் இருப்பதற்கு வேறென்னென்ன காரணம் என்பதை மருத்துவ ரீதியாக எப்படி கண்டறியலாம்?குழந்தைகளுக்கு உண்டான காசநோய் என்பது வெகுநாளாக உள்ள சளி நுரையீரலில் உறைந்து காணப்படுவதை தான் 'பிரைமரி காம்ப்ளக்ஸ்' ஆகும். அதன் அறிகுறி அடிக்கடி சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல், தொண்டை மற்றும் கழுத்துப் பகுதியில் நெறிகட்டி இருக்கும். இந்த பிரச்னைகள் இருந்தாலும் குழந்தையின் எடை கூடாது. இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி 'Dots' எனும் முறையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் பரிபூரண குணமடையலாம். இந்த சிகிச்சைக்கு பின் பசியின்மை மாறி குழந்தையின் எடை நன்றாக கூடி விடும்.* விட்டமின் 'D3' - 'கோலிக்கால் சிபாரல்' சத்து குறைபாடு என்றால் என்ன?கால்சியம் (விட்டமின் D3) எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கும் உதவும். நம் உடலில் கால்சியம் அளவு குறைந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தத்தில் கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் 'D3' எனும் கால்சியம் மருந்து கொடுக்கலாம். மேலும் நாம் குழந்தைகளை வெயிலில் விளையாடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விட்டோம். சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு தேவையான விட்டமின் 'D3' அதிகம் உள்ளது. அதனால் குழந்தைகளை வெயிலில் தாராளமாக விளையாட அனுமதிக்கலாம்.- டாக்டர். பிரசன்ன கார்த்திகுழந்தைகள் நல நிபுணர், மதுரை96299 02323


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !