உள்ளூர் செய்திகள்

கோடையில் உளுந்து வேண்டாமே!

வழக்கத்தை விட சீக்கிரமாகவே, இந்த ஆண்டு கோடை காலம் துவங்கி விட்டது. ஒரு பருவம் முடிந்து, இன்னொரு பருவம் ஆரம்பிக்கும்போது, காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் பிரச்னைகளின் பாதிப்பு இருக்கும். அதிலும் கோடை ஆரம்பித்தால், காரம், மசாலாவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஆரோக்கியமான உணவு என்று இட்லி, தோசை, வடை இவற்றை தினசரி உணவாக சாப்பிடுகின்றனர். ஆனால் உளுந்து, கோடை காலத்திற்கு ஏற்ற உணவு இல்லை. உளுத்தம்பருப்பு அஜீரணத்தை அதிகரிப்பதோடு, பித்தத்தையும் அதிகப்படுத்தும். அதனால், இந்த கோடை காலத்தில் இட்லி, தோசைக்கு மாற்றாக, கொள்ளு, பார்லி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, கொஞ்சம் அரிசி, துளசி இலை, மிளகு சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சி, வடிகட்டி ஆறிய பின், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.பேராசிரியர், டாக்டர் சுவாமிநாதன்ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனை.94444 41771


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !