உள்ளூர் செய்திகள்

கவலை வேண்டாம், கல்லீரல் இல்லை

*தலைவலி, தலை சம்பந்தப்பட்டது அல்ல. வயிற்றில் அமில சுரப்பு, மலச்சிக்கல், போதுமான தண்ணீர் குடிக்காதது, தலைவலிக்கான காரணங்களாக இருக்கலாம். காரணத்தை கண்டறிந்து சரி செய்யாமல், ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) வந்தவுடன், எக்ஸ் - ரே, ஸ்கேன் என்று எடுப்பது வீண்.* தேங்காய், நிலக்கடலை, பாதாம் இவற்றில் உள்ள நல்ல கொழுப்பு, ஹார்மோன் உற்பத்திக்கு தேவை. ஆனால் அசைவ உணவு, முட்டை, பால் இவற்றில் கெட்ட கொழுப்பு அதிகம். நம் உடலில் கல்லீரல் மட்டுமே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. எந்த தாவரத்திலும் கல்லீரல் கிடையாது. அதனால் தாராளமாக தாவர உணவு சாப்பிடலாம்.* புரத சத்து வேண்டும் என்பதற்காக முட்டை சாப்பிடுகிறோம். ஆனால், முட்டையை உற்பத்தி செய்யும் கோழி, விதைகளையும், கொட்டைகளையும், சிறுதானியங்களையும் சாப்பிடுகிறது. நாமும் அவற்றை நேரடியாக சாப்பிடலாமே!டாக்டர் யுவபாரத்நேச்சுரோபதி மருத்துவர்99623 30798


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !