உள்ளூர் செய்திகள்

ரத்தக் கொதிப்பிற்கு மின்னோட்ட சிகிச்சை

எனக்கு, 2 ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது 'ஆஸ்பிரின், அட்டோர்வா ஸ்டாட்டின்' மற்றும் 'அட்டினலால்' ஆகிய மாத்திரைகளை, தொடர்ந்து எடுத்து வருகிறேன். இதனால் பாதிப்பு வருமா? எஸ். பரமசிவம், விருதுநகர்மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ரத்தம், சிறுநீர், எக்கோ, டிரெட்மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவை அனைத்தும், 'நார்மல்' என்றால், மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவற்றில் ஆஸ்பிரின், அட்டோர்வா ஸ்டாட்டின் மாத்திரைகளை வேளை தவறாமல் எடுக்க வேண்டும். அட்டினலால் என்பது, 'பீட்டா பிளாக்கர்' என்ற மருந்து வகையைச் சேர்ந்தது. இது முன்பு சிறந்த மாத்திரையாக கருதப்பட்டது. தற்போது இம்மருந்தை தவிர்ப்பது நல்லது. இதை எடுப்பதால் பலபக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே, இதை நிறுத்திவிட்டு உங்கள் டாக்டரை கலந்து ஆலோசித்து, வேறு பீட்டா பிளாக்கர் வகை மாத்திரையை எடுப்பது சிறந்தது.எனக்கு 7 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. தற்போது 6 வகை ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இருந்தாலும், எனக்கு ரத்தஅழுத்தம் 170/100 என்ற அளவில் இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? பி.சாலமன்ராஜா, கொடைக்கானல் ரத்தக்கொதிப்புக்கு வாழ்வியல் மாற்றமே முக்கியமானது. உணவில் உப்பை குறைத்து, எண்ணெயை தவிர்த்து, நிறைய காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். தினசரி நடைப்பயிற்சியும் செய்தாக வேண்டும். இத்துடன் பலருக்கு மாத்திரைகள் தேவைப்படும். அனைத்து மருந்துகளையும் கொடுத்தும் ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையெனில், தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது. Renal Denervation (RDV)என்பதே அந்த நவீன சிகிச்சை முறை. இதில், ஒரு கதீட்டரை சிறுநீரக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, மின்னோட்ட (கரன்ட்) சிகிச்சை மூலம் எளிதாக, அரைமணி நேரத்திற்குள் செய்து விடுவர். இது அறுவை சிகிச்சை இன்றி செய்யும் எளிய முறையாகும். இதை செய்த பிறகு, ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.பின்னர் மாத்திரைகளின் எண்ணிக்கையும், நன்கு குறைந்துவிடும். இது இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் வர உள்ளது.டாக்டர் விவேக்போஸ்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்