ரத்தக்கொதிப்பிற்கு மின்னோட்ட சிகிச்சை
எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது 'ஆஸ்பிரின்', 'அட்டோர்வா ஸ்டேட்டின்' மற்றும் 'அட்டினலால்' ஆகிய மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். இதனால் பாதிப்பு வருமா? எஸ். பரமசிவம், விருதுநகர்மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ரத்தம், சிறுநீர், எக்கோ, டிரெட்மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவை அனைத்தும் நார்மல் என்றால், மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவற்றில் ஆஸ்பிரின், அட்டோர்வா ஸ்டேட்டின் மாத்திரைகளை வேளை தவறாமல் எடுக்க வேண்டும். அட்டினலால் என்பது, 'பீட்டா பிளாக்கர்' என்ற மருந்து வகையைச் சேர்ந்தது. இது முன்பு சிறந்த மாத்திரையாக கருதப்பட்டது. தற்போது இம்மருந்தை தவிர்ப்பது நல்லது. இதை எடுப்பதால் பலபக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே இதை நிறுத்திவிட்டு உங்கள் டாக்டரை கலந்து ஆலோசித்து, வேறு பீட்டா பிளாக்கர் வகை மாத்திரையை எடுப்பது சிறந்தது.எனக்கு 7 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. தற்போது 6 வகை ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இருந்தாலும் எனக்கு ரத்தஅழுத்தம் 170/100 என்ற அளவில் இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? பி.சாலமன்ராஜா, கொடைக்கானல்ரத்தக்கொதிப்புக்கு வாழ்வியல் மாற்றமே முக்கியமானது. உணவில் உப்பை குறைத்து, எண்ணெயை தவிர்த்து, நிறைய காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வது முக்கியமானவை. இத்துடன் தினசரி நடைப்பயிற்சியும் செய்தாக வேண்டும். இத்துடன் பலருக்கு மாத்திரைகள் தேவைப்படும். உங்களைப் போன்ற தீவிர ரத்தக்கொதிப்பு உள்ளவருக்கு, தற்போது நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. மருந்துகளை சற்று மாற்றி அமைத்தால், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரவாய்ப்புகள் உள்ளன. அனைத்து மருந்துகளையும் கொடுத்தும் ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையெனில், தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது.கீஞுணச்டூ ஈஞுணஞுணூதிச்tடிணிண (கீஈங) என்பதே அந்த நவீன சிகிச்சை முறை. இதில் ஒரு கதீட்டரை சிறுநீரக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, மின்னோட்ட (கரன்ட்) சிகிச்சை மூலம் எளிதாக, அரைமணி நேரத்திற்குள் செய்து விடுவர். இது அறுவை சிகிச்சை இன்றி செய்யும் எளிய முறையாகும். இதை செய்த பிறகு, ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். பின்னர் மாத்திரைகளின் எண்ணிக்கையும், நன்கு குறைந்துவிடும். இது இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் வர உள்ளது.எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது. டாக்டர்கள் பைபாஸ் சர்ஜரி தேவை என்கின்றனர். எனக்கு சர்க்கரை இருப்பதால், பைபாஸ் சர்ஜரி செய்யலாமா? பி.ராஜா, ராமநாதபுரம்சர்க்கரை நோய், நம் உடலில் பல பாகங்களை கொடூரமாக பாதிக்கும் தன்மைபடைத்தது. குறிப்பாக ரத்தக்குழாய்கள், மூளை, சிறுநீரகம், இருதயம், கண்கள் ஆகியவை முதன்மையானவை. சர்க்கரை நோய் உள்ளவருக்கே பெரும்பாலும் இருதய நோய்கள் வருகின்றன. பைபாஸ் சர்ஜரி செய்பவரில் பலர் சர்க்கரை நோயாளிகளாகத்தான் உள்ளனர். எனவே சர்க்கரை நோயாளிகள் பைபாஸ் சர்ஜரியை தாராளமாக எளிதில் செய்து கொள்ள இயலும். அறுவை சிகிச்சையின்போது, மாத்திரைகளுக்குப் பதில் 'இன்சுலின்' வழங்கப்படும். அதை அறுவை சிகிச்சை முடிந்தபின், குறைந்தது 6 வாரங்களுக்கு தொடர்ந்து எடுப்பது நல்லது. இன்சுலின் எடுப்பதால் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் புண் எளிதில் ஆறிவிடும். அறுவை சிகிச்சை முடிந்தபின்னும், சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க, உணவுப் பழக்கம், நடைப்பயிற்சி செய்தால், வரும்காலத்தில், புதிதாக பொருத்தப்பட்ட ரத்தக்குழாயில் அடைப்பு வராமல் பாதுகாக்க முடியும்.எனது வயது 66. மூன்று ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. அடிக்கடி தலைச்சுற்றலும் உள்ளது. நான் என்ன செய்வது? மி. பாலகிருஷ்ணன், கூடலூர்ரத்தக்கொதிப்பு உள்ளவருக்கு தலை பாரமாகவும், தலைச்சுற்றுவதாக இருந்தாலும், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். எனவே ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை முதலில் அறிய வேண்டும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த தருணத்திலும் ரத்தஅழுத்தமானது 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். எனவே, முதலில் நீங்கள் ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளதா என அறிந்து, உங்கள் மாத்திரைகளை மாற்றி அமைத்து, ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். அதன் பின்னும், தலைச் சுற்றுகிறது என்றால், மூளை, நரம்பியல் தொடர்பான சில பரிசோதனைகளை செய்து, அதன் முடிவுக்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை.