ஒவ்வொரு பூக்களுமே!
அழகுக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே பூக்கள் பயன்படுத்தப்படுவதாக நம்மில் பலரும் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால், பல்வேறு பூக்களிலும் நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. இதை அறிந்துதான், நம் முன்னோர் தலையில் பூச்சூடுவதை வழக்கமாக்கினர். பல்வேறு பூக்களும், அவற்றின் மருத்துவ பயன்களும் வருமாறு:அகத்திப்பூ: புகைபிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால், உண்டாகும் சூட்டையும் தணிக்க வல்லது.முருங்கைப்பூ: பித்தம் நீக்கும், வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.செந்தாழம்பூ: தலைவலி, கபம், ஜலதோஷம், வாத நோய் ஆகியவற்றை குணப்படுத்தக்கூடியது.செவ்வகந்திப்பூ: உடற்சூட்டை தணிக்கும்.வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இந்த பூ, வெப்பு நோய்களை குணப்படுத்தக்கூடியது.இலுப்பைப்பூ: நல்ல சுவையுடைய இந்த பூ, பாம்பின் விஷத்தையும் முறிக்க வல்லது.புளியம்பூ: இந்த பூ, பித்த நோய், சுவையின் மை, வாந்தி ஆகியவற் றை குணப்படுத்தும்.மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, ரத்தமூலம் ஆகிய நோய் நீங்கும். ரத்தம் மிகுதியாகும். உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால், சுவையின்மை, மலப்பூக்கள், நாக்கு நோய்கள், ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாதம், ஆகியவை தீரும்.முள்முருங்கைபூ: சளி, இருமல் நீங்கும்.வாழைப்பூ: சீதபேதி, ரத்தமூலம், இருமல், கைகால் எரிச்சல், குணமாகும்.மல்லிகைப்பூ: கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும்.பன்னீர்பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் தீரும்.