சவால்களை எதிர்கொள்ள பிட்னெஸ் அவசியம்!
காலையில் துாங்கி எழுந்ததும், பலவீனமாக நம்மை நாமே வெறுப்பாக உணர்ந்தால், தனிப்பட்ட முறையிலும், அலுவலக வேலையானாலும் சிறப்பாகச் செய்ய முடியாது. அறிவுப் பூர்வமாக சிந்திப்பது சிரமம். இந்த உணர்விலிருந்து முழுமையாக வெளி வருவதற்கான வழி, ஏதாவது ஒரு உடற்பயிற்சி. அனைவரும் பிட்னெசில் கவனமாக இருக்க வேண்டும்.இளம் வயதில் பல விஷயங்களில் அலட்சியமாக இருந்திருப்போம். எந்த நிமிடத்தில் உடல் வலிமையுடன் மாறுகிறோமோ, அந்த வினாடியே, பல சவால்களை சுலபமாக நம்மால் எதிர்கொள்ள முடியும். டில்லியில் இருந்தால், தினமும் 45 நிமிடங்கள் பேட்மின்டன் விளையாடுவேன்; என்னால் விளையாட முடிகிறது என்றால், அனைவராலும் முடியும்.அது மட்டுமன்றி, 15 நாட்களுக்கு மேல் பயணங்களின் போது, அலுவல்களுக்கு ஏற்ப கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வேன். வாய்ப்பு கிடைத்தால், 'ஜிம்'மிற்கு செல்வதுண்டு.தினமும் காலையில் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தவறாமல் செய்கிறேன். இதனால் மன அழுத்தம் விலகி, அனைவருடனும் அன்பாக, இனிமையாக பேச முடிகிறது என்பதை அனுபவத்தில் உணர்கிறேன். இன்னொன்று, அறிவுத் திறனை கூர்மைப்படுத்துவதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. தாமதமாகவே யோகா பயிற்சியை செய்ய ஆரம்பித்தேன். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை யோகா தந்திருக்கிறது.டாக்டர் எஸ். ஜெய்சங்கர்மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்