உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பஞ்ச தந்திரங்கள்!

1. வாரத்தில் ஒரு நாள் உபவாசம் இருப்பது. உபவாசம் என்றால் அந்த நாள் முழுதும் பட்டினியாக இருக்க வேண்டும் என்பதில்லை. பழங்கள் சாப்பிடலாம்; பழச்சாறு குடிக்கலாம். இதனால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். செல்கள் புதுப்பிக்கப்படும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஹார்மோன் செயல்பாடுகள் சீராக அமையும். 2. தினமும் 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். தண்ணீர் குடிப்பதால், உடலில் நச்சுகளை தேங்க விடாது. தோல் பிரச்னைகள் வராமல் இது தடுக்கும்.3. அளவுக்கு அதிகமான யோசனை; எதிர்காலத்தை பற்றிய பயம். கடந்த கால நிழ்வுகளில் இருந்து வெளியில் வர முடியாமல், இப்படி ஆகி விட்டதே, அப்படி ஆகி விட்டதே என்று யோசிப்பது. இதனால், நிகழ்காலத்தை தவற விடுகிறோம். மன அழுத்தம் ஏற்படுகிறது. துாக்கம் வருவது பெரிய பிரச்னையாக உள்ளது. சரியான துாக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்செயல்பாடுகளில் மாறுதல் ஏற்பட்டு, பல நோய்கள் வருகின்றன. ஆழ்ந்த துாக்கம் இல்லாவிட்டால், பசி உணர்வு அதிகமாகும். எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்ட திருப்தி இருக்காது. திரும்ப திரும்ப சாப்பிடத் தோன்றும். நம்மை அறியாமலேயே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். இதனால், உடல் பருமன், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு கோளாறுகள் வரலாம்.4. கழிவுகள் உடலில் சேர்வது தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது. தினமும் மலம் கழிக்க வேண்டும். மலச்சிக்கல் தான் பல சிக்கல்களுக்கு காரணம்.5. நாள் முழுதும் உடலுக்கு எந்த அசைவும் தராமல் உட்கார்ந்தே இருக்கிறோம். நடப்பதே சிரமமாக இருக்கிறது. தினமும் 30 - 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம். நடைபயிற்சி செய்யலாம். யோகா, பிராணயாமம் செய்யலாம். இதனால் உடல், மனம் இரண்டும் சம நிலையில் இருக்கும். மன அழுத்தம் குறையும். ஜிம் செல்வதால் தசைகள் வலுப்படும். உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர்.என்னை பொறுத்தவரை, ஒரு கருவியை சார்ந்து உடற்பயிற்சி செய்யும் போது, துவக்கத்தில் பலன் இருப்பதை போன்று தெரிந்தாலும், நாளடைவில் பக்க விளைவுகள் வரலாம்.டாக்டரின் ஆலோசனை பெற்று, அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியத்தை காக்கலாம்.நாள்பட்ட மருந்துகளால் பக்க விளைவுகள் வரும். முடிந்த வரை மருந்துகளை குறைத்து, உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தாலே உடல் கோளாறுகள் இயல்பாக குறையும்.பேராசிரியை மங்கையர்கரசி,யோகா, இயற்கை மருத்துவம்,அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,சென்னை044 - 2957 2249alagarmangai@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !