சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது
'வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வையும், சாதாரணமாக எடுத்துக்கொண்டால், ரத்த அழுத்தம் வராது; நோயின்றி நிம்மதியாக வாழலாம்,'' என்கிறார், டாக்டர் சவுந்திரவேல்.ரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணங்களாக இருப்பவை, மன அழுத்தம், பணிச்சுமை, முறையற்ற வாழ்க்கை முறை, மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லாமல், மனதுக்குள்ளேயே வைத்திருப்பது போன்றவை காரணங்கள்.பெரும்பாலானோர் இதில் ஏதாவது ஒருவகையில்தான், ரத்த அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இது வெறும் 5 முதல் 8 சதவீதம் தான். மீதமுள்ள, 95 சதவீதம் வரை, என்ன காரணம் என்றே தெரியாத வகையில், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.ரத்த அழுத்தம் இருப்பவர்களின், பிற உறுப்புகள் பாதிக்கப்படுமா?ஐந்து முதல் 8 சதவீதம் வரையிலான ரத்த அழுத்த நோயாளிகளை, உரிய பரிசோதனை, சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம். முதலில், எதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும். சிறுநீரகம், இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால், ரத்த அழுத்தம் ஏற்படும். அடைப்புகளை சரி செய்தால், ரத்த அழுத்தம் இருக்காது. ரத்த அழுத்தம் இருப்போருக்கு, பிற உடல் உறுப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது அவசியம்.ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, தலை சுற்றல் ஏற்படுவது எதனால்?ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான், தலை சுற்றல் ஏற்படும் என்பதில்லை. அனைவருக்கும் ஏற்படும். நம் மூளையில் இருந்து, உடல் இயக்கத்துக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அந்த கட்டளைப்படி, நாம் இயங்கும்போது எந்த பிரச்னையும் இல்லை. மாறாக, நம் உடலை நாமாக இயக்க எத்தனிக்கும்போது, தலை சுற்றல் ஏற்படுகிறது.ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட, செய்ய வேண்டியது என்ன?எந்த ஒரு நிகழ்வையும், சாதாரணமாக கையாள வேண்டும். படபடப்புடன் இருந்தால், ரத்த அழுத்தம் தானாக உயரத்துவங்கி விடும். தியானம், யோகா உள்ளிட்டவற்றின் மூலம் மன அமைதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யலாம்; வாக்கிங் செல்லலாம். பொருளாதார ரீதியாக, குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; மனம் நிம்மதி அடையும். ரத்த அழுத்தம் ஸ்டெடியாக இருக்கும்.மாத்திரைகளால் இதை கட்டுப்படுத்த முடியுமா?மாத்திரைகளை உட்கொண்டால் மட்டும் போதாது. மாத்திரைகள் உட்கொள்கிறோம் என்ற தைரியத்தில், மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்காது. பாதிப்புகள் அதிகரித்து விடும். டோன்ட் ஒர்ரி...பீ ஹேப்பி!