உள்ளூர் செய்திகள்

அதிக சத்தம் கேட்டால் நெஞ்சில், "திக் திக்?

மனித காதுகளால், 85, 'டெசிபல்' வரையிலான ஒலியை தாங்க முடியும். இந்த அளவிற்கு மேலான ஒலியை கேட்கும்போது நமக்கு, அதிர்ச்சி ஏற்படுவது இயல்பு. இதயம் பாதிக்கப்படுவது போல் உணர்வோர், பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.ஒரு நாளைக்கு, மூன்று, ஐந்து என, முறை வைத்து, சிகரெட் புகைப்பவர்களுக்கு, நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருமா?மற்றவர்களை விட, புகை பிடிப்போருக்கு, நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நோய், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் சிகரெட் புகைப்பவர்களுக்கு மட்டும் தான் வரும் என, சொல்ல முடியாது. மேலும், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரலில் உள்ள, வடிக்கட்டிகளில், நாளடைவில் அடைப்பு ஏற்படும். இதனால், அவர்களுக்கு எளிதில் நுரையீரல் தொற்று ஏற்படுவதுடன், இருமல், மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதை தவிர்ப்பது நல்லது.அடிக்கடி வறட்டு இருமல் வருவோருக்கு, நுரையீரல் பிரச்னை இருக்குமா?ஒருவரின் ரத்த வெள்ளை அணுக்களில், 6 சதவீதம் வரை, 'ஈசினோபில்' எனும், பகுதிப் பொருள் இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரிப்பது கூட, வறட்டு இருமலுக்கு காரணமாக இருக்கலாம். தொண்டை எரிச்சலாலும், இருமல் வரலாம். பரிசோதனைக்கு பின், உரிய மாத்திரைகளை உட்கொண்டால், வறட்டு இருமலை விரட்டலாம். அதற்குப் பிறகும், இருமல் தொடர்ந்தால், நுரையீரல் நிபுணரிடம் காட்ட வேண்டும்.வாகனங்களின், 'ஹாரன்' ஒலியால், இதயம் பாதிக்கப்படுவது போல் உணர்வோர், என்ன செய்ய வேண்டும்?மனித காதுகளால், 85, 'டெசிபல்' வரையிலான ஒலியை தாங்க முடியும். இந்த அளவிற்கு மேலான ஒலியை கேட்கும்போது நமக்கு, அதிர்ச்சி, படபடப்பு ஏற்படுவது இயல்பு. இதயம் பாதிக்கப்படுவது போல் உணர்வோர், உடனடியாக, ரத்த அழுத்தம்,ஈ.சி.ஜி., ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கு, தினமும் மாத்திரை உட்கொள்வோருக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அவர்கள், கூடுதல் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி உள்ளது. இதனால், மாத்திரை, 'ஓவர் டோஸ்' ஆகி, அவர்களின் கல்லீரல் பாதிக்கப்படுமா?'ஓவர் டோஸ்' என்பது, ஒருவர் உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கையை பொறுத்தது அல்ல. குறிப்பிட்ட ஒரு மாத்திரையை, ஒருவர், ஒரு நாளைக்கு, குறிப்பிட்ட அளவிற்கு மேல் உட்கொண்டால் தான், 'ஓவர் டோஸ்' ஆகும். எனவே, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கு, தினமும் மாத்திரை உட்கொள்வோர், காய்ச்சலுக்கான மாத்திரைகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி தைரியமாக உட்கொள்ளலாம். டி.பி., - எச்.ஐ.வி., போன்ற நோய்கள் மற்றும் கொழுப்பு சத்தை கரைப்பதற்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வோருக்கு கல்லீரல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இவர்கள், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கல்லீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.தூக்கத்தில், சில குழந்தைகள் பல்லை கடிப்பதற்கு காரணம் என்ன?குழந்தைகளின் பல் கடிக்கும் பழக்கம், நாளடைவில் மறைந்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆண்டுக்கணக்கில் நீடித்தால், அக்குழந்தைகளுக்கு மூளையில் பிரச்னை இருக்கலாம். இவர்களுக்கு, ஈ.ஈ.ஜி., பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.டாக்டர் என்.ரகு,ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை,சென்னை. 97893 22465


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்