கண்களை ஸ்கேன் செய்தால் இதயத்தை பார்க்கலாம்!
கண்களை 'ஸ்கேன்' செய்தால் போதும்; இதயத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைத் துல்லியமாக சொல்லிவிடலாம். இது தான், 'ஆர்ட்ரிபீஷியல் இன்டலிஜென்ட்' எனப்படும் ஏ.ஐ., செயற்கை நுண்ணறி வின் சிறப்பு. இதை உருவாக்க கடந்த நான்கு ஆண்டுகளாக உழைத்திருக்கிறோம். இதயத்தில் பிரச்னை, ரத்த நாளங்களில் அடைப்புஇருக்கிறதா என்று உறுதி செய்வதற்கு, 'சி.டி., ஸ்கேன், எக்ஸ் - ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' எதுவும் தேவையில்லை. கூகுள் ஏ.ஐ., கண்களை ஸ்கேன் செய்து சொல்லிவிடும். இதன் இன்னொரு சிறப்பு, உடம்பிற்குள் என்ன நடக்கிறது என்பதை சுலபமாக கண்டறிந்து சொல்வது தான்.சில மாதங்களுக்கு முன், இன்னொரு விஷயத்தையும் வெளியிட்டேன். கூகுள் ஏ.ஐ., உதவியுடன், கண்களின் விழித்திரையை - ரெடினோ ஸ்கேன் செய்தால் போதும். ஒருவரின் வயது, பாலினம், அவர் குடிப்பழக்கம் உள்ளவரா, சிகரெட் பிடிப்பாரா, மாட்டாரா என்று அனைத்து விபரங்களையும் கூகுள் ஏ.ஐ., உதவியுடன் சுலபமாக கண்டறிய முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்று, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா என்று கூட சொல்லி விடும்.தற்போது நான்கு ஆண்டுகளாக உழைத்து, கண்களில் ஸ்கேன் எடுப்பதன் வாயிலாக இதய ரத்த நாளங்கள், இதயத்தில் உள்ள பிரச்னைகளை சுலபமாக கண்டறியும் கூகுள் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி உள்ளோம்.சுந்தர் பிச்சை,தலைமை செயல் அதிகாரி,கூகுள் நிறுவனம்.