உள்ளூர் செய்திகள்

அதிகரிக்கும் ஞாபக சக்தி

பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, பாதாம் நமது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதாம் பருப்பு வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்ற தவறான புரிதல், பலரிடம் உள்ளது. பாதாம் பருப்பை கிலோ கணக்கில் வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, குறைந்த கொள்ளளவில், குறைந்த விலைகளில் கூட, பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றனர். மாலை வேளையில், எண்ணெய் பலகாரங்களை நொறுக்குவதை விட்டு விட்டு, பாதாம் பருப்பை வாங்கி உட்கொள்வதை நடைமுறைப்படுத்தலாம்.பாதாம், நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. தரமான பாதாம் பருப்பை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு தருவதை பழக்கப்படுத்தலாம். இதன் மூலம், சிறு வயதிலேயே ஞாபக சக்தி குழந்தைகளுக்கு கிடைக்கும்.ரத்தத்துக்கு நன்மை செய்யும் எச்.டி.எல்., கொலஸ்ட்ரால் அதிகரிக்கவும், கேடு செய்யும் கொலஸ்ட்ரால் குறையவும், தினமும் பாதாம் பருப்பு 25 கிராம் சாப்பிடுதல் தவறில்லை. ஆனால், உடல் பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கமாக இருப்பது அவசியம்.நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு, நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும், கவலையும் அதிகம் எனில், அப்போது, பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால், வைட்டமினும் தாராளமாக கிடைக்கும்.ஒரு நாளுக்கு மூன்று நான்கு தேநீர் சாப்பிடும் அளவை குறைத்து, பாதாம்பருப்பை வாங்கி உட்கொண்டால், உங்களின் ஆரோக்கியம் உங்களின் கைகளில் தான் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்