சிறுநீரக தொற்று பாதிப்பா? கவலை வேண்டும்!
தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகுவதன் மூலம் சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்இந்தியாவில், சிறுநீர் தொற்று, அவசரமாக சிறுநீர் கழித்தல் (Urge Leak) போன்ற, சிறுநீரகம் தொடர்பான நோய்கள், இளம் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் அதிகரித்து வருவதாக, புள்ளி விவரம் ஒன்று, அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இப்பிரச்னைகளுக்கு ஆளாவோரில் பெரும்பாலோர், இவை குறித்து வெளியே சொல்ல கூச்சப்படுவது, சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவை, இந்நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது. இந்நோய்களுக்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் சியாமளா கோபி.1. சிறுநீரக தொற்று எவற்றால் ஏற்படுகிறது?பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால், பெண்களுக்கு இப்பிரச்னை உண்டாகிறது.2. இதற்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன?சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள். சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது. இதற்குரிய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில், 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை ஆகியவை செய்து, சிறுநீரகவியல் நிபுணரின் ஆலோசனைப்படி, சிகிச்சை மேற்கொண்டால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.3. இதை தடுக்க, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?பிறப்புறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றால், சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்.4. அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை எதனால் வருகிறது?இதில், அவசரமாக சிறுநீர் கழிப்பது (Urge leak), அழுத்தம் காரணமாக ஏற்படும் சிறுநீர் கசிவு (Stress leak) என, இருவகைகள் உள்ளன.சிறுநீர்ப்பை சதைகளின் இயக்கத்திற்கு பயன்படும், 'அசிட்டைல் கோலின்' எனும் வேதிப்பொருள், அளவிற்கு அதிகமாக சுரப்பதால், சிறுநீர்ப்பையின் செயல்திறன், வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து, அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படுகிறது.கழிப்பறை செல்வதற்குள் சிறுநீர் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுதல், படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை, இரவில் அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.'யுரோ டைனமிக்ஸ்' பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை கண்டறிவது உள்ளிட்ட, சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை பரிசோதித்து, உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவசர சிறுநீர் கழிக்கும் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் நோய்களுக்கு ஆளானவர்களுக்கு, சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிறுநீரக குழாயின் பக்கவாட்டு தசைகள் பலவீனம் அடைவதால், அழுத்தம் காரணமான சிறுநீர் கசிவு உண்டாகிறது. பெரும்பாலும், பெண்கள் தான் இப்பிரச்னைக்கு ஆளாகின்றனர்.இதனால், இருமல், தும்மல் உண்டாகும்போதும், தூக்கத்தின்போது, படுக்கையில் திரும்பி படுக்கும்போதும், குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலைகளை செய்யும்போதும், சிறுநீர் வெளியேறும் இன்னல் அவர்களுக்கு உண்டாகிறது.இப்பிரச்னைக்கு ஆளாவோரின், பலவீனம் அடைந்த, சிறுநீரக குழாயின் பக்கவாட்டு தசைகளை, 'பிசியோதெரபி' பயிற்சியால் வலுவடைய செய்தல், தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு, சிறு அறுவை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால், அழுத்தம் காரணமான சிறுநீர் கசிவுக்கு தீர்வு காணலாம். சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகி, உரிய சிகிச்சை பெறுவதன் மூலம், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.டாக்டர் சியாமளா கோபி,சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்,அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.94444 54387