"நிமோனியா காய்ச்சலுக்கு ஊசிமருந்து போதுமா?
வயிற்றுக்குள் என்ன நோய் என்று கண்டறிய, 'எண்டாஸ்கோப்' பயன்படுத்துவது போல, நுரையீரலில் உள்ள நோயை கண்டறிய, 'பிராங்கோஸ்கோப்' பயன்படுகிறது. இதை மூக்கு அல்லது வாயின் உள்ளே செலுத்தி, தொண்டை வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்குள்ள பாதிப்பை கண்டறியலாம்.* எனது சித்தியின் வயது 50. தொடர்ந்து இருமல் இருந்தது. எக்ஸ்-ரே எடுத்து பார்க்கும்போது, வட்டமாக கட்டியிருப்பதாக டாக்டர் கூறினார். மேலும் 'பிராங்கோஸ்கோப்' செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதைப் பற்றிக் கூறுங்களேன்?சேகர், சிவகாசிவயிற்றுக்குள் என்ன நோய் என்று கண்டறிய, 'எண்டாஸ்கோப்' பயன்படுத்துவது போல, நுரையீரலில் உள்ள நோயை கண்டறிய, 'பிராங்கோஸ்கோப்' பயன்படுகிறது. இதை மூக்கு அல்லது வாயின் உள்ளே செலுத்தி தொண்டை வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்குள்ள பாதிப்பை கண்டறியலாம்.சளி போன்றவற்றை பரிசோதனைக்கு எடுக்கவும், நோய் கிருமியை கண்டறியவும், 'பயாப்ஸி' செய்யவும், கடலைப் போன்ற வெளியில் உள்ள பொருட்கள் எதையாவது விழுங்கி விட்டால், வெளியில் எடுக்கவும் பலவகைகளில் உதவும் ஒரு கருவி. எனவே, நுரையீரலில் நோயை கண்டறியவும், குணப்படுத்தவும், பிராங்கோஸ்கோப் ஒரு இன்றியமையாத நவீன கருவி. இதனால், உங்கள் சித்திக்கு பிராங்கோஸ்கோப் செய்து, எவ்வகை கட்டி என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை செய்வது மிக அவசியம்.* அறுபது வயதாகும் எனது தாயாருக்கு ஒருவாரமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்தது. அவரை பரிசோதித்த டாக்டர், நுரையீரலைச் சுற்றி நீர் சேர்ந்துள்ளது என்கிறார். இதற்கு என்ன காரணம்?வேலு, திருச்சிஒரு சாதாரண ரத்தசோகை முதல் தொற்றுநோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல காரணங்களால் நுரையீரலைச் சுற்றி நீர்சேர வாய்ப்புள்ளது. நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் நீர் சேரலாம். நமது நாட்டில் டி.பி., போன்ற நோய் தொற்றுக்களாலும், நுரையீரலை சுற்றி நீர் சேரும். ஒருவருக்கு, 60 வயதுக்கு மேல் நுரையீரலில் நீர் சேர்ந்திருந்தால், புற்றுநோய் போன்ற நோய் உள்ளதா, இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய வேண்டும். நுரையீரலை சுற்றியுள்ள நீரை ஊசியின் மூலம் எடுத்து, அதை பரிசோதனை செய்து, என்ன காரணம் என்று கண்டறிந்து பின், அதற்கு சிகிச்சை செய்வது முக்கியம். உங்கள் தாயை டாக்டரிடம் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்து, பின் மருத்துவம் செய்வதே சிறந்தது.* என் மகனின் வயது 8. அவனுக்கு பத்து நாட்களாக காய்ச்சல், இருமல் உள்ளது. அவனை பரிசோதித்த டாக்டர் நிமோனியா உள்ளது என்று கூறினார். அதற்கு ஊசி, மருந்து எடுத்துக் கொண்டு வருகிறான். இது போதுமானதா? பின்னால் பக்கவிளைவுகள் வருமா?லலிதா, புதுக்கோட்டைநோய் கிருமிகள் நுரையீரலை பாதிக்கும்போது, அங்கு சளி இறுகி நுரையீரல் பாதிப்புக் குள்ளாகிறது. அதுவே 'நிமோனியா!' இது வைரஸ், பாக்டீரியா, பங்கஸ் போன்ற கிருமிகளால் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறு குழந்தைகளுக்கு பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய் கிருமிகளால் நிமோனியா வர அதிக வாய்ப்புள்ளது. உங்கள் மகனுக்கு எவ்வகை நோய் கிருமி என்று கண்டறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும். பாக்டீரியா நிமோனியாவுக்கு, சரியான 'ஆன்டிபயாடிக்' கொடுத்தால் சரியாகிவிடும். சரியான ஆன்டிபயாடிக்கை தேர்வு செய்து, தேவையான நாட்கள் கொடுப்பதன் மூலம் நிமோனியாவை குணப்படுத்தலாம். சத்தான உணவு, சுத்தமான காற்று, போதுமான உடற்பயிற்சி மூலம் வருமுன் தடுக்கலாம்.டாக்டர் எம். பழனியப்பன்94425 24147