மூட்டு தேய்மானத்துக்கு நாட்டு மருந்து நல்லதா?
ராகவன், கோவில்பட்டி: இரு ஆண்டுகளாக, மூட்டு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நாட்டு மருந்துகளால் இதற்கு குணம் பெற முடியுமா?எவ்வித சிகிச்சை முறையின் பலன்களும், முறையான நீண்டகால ஆராய்ச்சிகளால், அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன், உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஆழ்ந்த ஆராய்ச்சிகள் மூலம், நாட்டு மருந்துகளின் பலன்கள் நிரூபிக்கப்படவில்லை. உலகில், மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களோ பல லட்சம் மக்கள். நாட்டு மருந்து உட்கொள்வோர், சில காலம் வலிகுறைவது போல உணர்ந்தாலும், நீண்ட காலத்திற்கு வலி நிவாரணம் நீடித்திருப்பதில்லை. நீண்டகால தீர்வாக, மூட்டு மாற்று சிகிச்சை தான் பரிந்துரைக்கப்படுகிறது.