உள்ளூர் செய்திகள்

நகை அழகுக்கல்ல... ஆரோக்கியத்துக்கு!

எதற்காக நகைகள் அணிகிறோம்? அழகுக்கு தானே... இதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என தலைப்பை பார்த்து ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. உண்மைதான். நகை, நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெப்பம் அதிகம். இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் மட்டுமே ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு, மருந்து உபயோகிப்பதை விட நகைகளை அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் மட்டுமல்லாமல் முத்து, வெள்ளி போன்றவற்றில் நகை அணிவது, ஆரோக்கியத்துக்காகத்தான். ஒவ்வொரு நகையும் எவ்வாறு நம் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்பதை பார்ப்போம்.கொலுசு அணிதல்: வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி, குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளிக் கொலுசு குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் குதிகாலின் பின் நரம்பின் வழியாக, மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது. மெட்டி அணிதல்: பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள், கால் விரல்களிலேயே இருக்கிறது. இது, கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது.அரை நாண் கொடி அணிதல்: உடலின் நடுப்பகுதியான இடுப்பில், அரை நாண் அணியும் முக்கிய நோக்கமே உடலில் ரத்த சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். ரத்த ஓட்டம் சீராகவும், சமநிலையுடனும் இருக்கவே, அரை நாண் கொடி பயன்படுகிறது. ஆண், பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.மோதிரம் அணிதல்: விரல்களில் அணியும் மோதிரம் டென்ஷனை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கும் உதவுகிறது. இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கும். சுண்டு விரலில் மோதிரம் அணிவது தடுக்கப்படுவது ஏன் என்றால், இதய கோளாறுகள் ஏற்படும்.மூக்குத்தி அணிதல்: பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில், சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றவும், மூக்கு தொடர்பான பிரச்னைகள் உருவாவதை தடுக்கவும் மூக்குத்தி உதவுகிறது. காதணி அணிதல்: காது சோனையில் துவாரமிட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப்படும். ஜீரணக்கோளாறு, கண் பார்வை கோளாறு சரியாகும்.வளையல் அணிதல்: வளையல் அணிவதன் முக்கிய நோக்கம், ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில், ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்