கந்தராசனம்
கந்தராசனம் செய்முறை1விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும்.2மெதுவாக முழங்காலை மடக்க வேண்டும்; இரு கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்.3கைகளால் கணுக்காலை பிடிக்க வேண்டும். முடியவில்லையென்றால்,கைகளை குதிகால் அருகில் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.4கைகள் உடம்பை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.5பின், மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, முதுகை மேலே உயர்த்த வேண்டும்.6 தொடை பகுதி நேராக இருக்க வேண்டும்; கழுத்து பகுதியை உயர்த்தக்கூடாது.7இந்நிலையில் நிதானமாக மூச்சை இழுத்து விட வேண்டும்.8வயிற்று பகுதியை மனதில் நினைக்க வேண்டும்.9 சிறிது நேரம் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, சாதாரண நிலைக்கு வர வேண்டும்.பலன்கள்முதுகுவலி குறைகிறது.செரிமான கோளாறுகள் நிவர்த்தி ஆகிறது.தைராய்டு சுரப்பி நன்கு தூண்டப்பட்டு செயல்படுகிறது.மாதவிடாய் கோளாறுகள் சரியாகின்றன.சுவாச பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053