குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அரிசி சாதம் ஆரோக்கியம்!
யோசித்துப் பாருங்கள்... பிறந்தது முதல் இறக்கும் வரை, சாப்பிடுவதில் துவங்கி, இறுதிச் சடங்கு வரை, நம்முடன் சேர்ந்தே வருவது, அரிசி. ஆனால், நீரிழிவு, உடல் பருமன் என்ற வார்த்தைகளை கேட்டவுடன், அரிசியை எதிரியாகப் பார்க்கிறோம்.நம் உடம்பிற்கு அவசியமான, முக்கிய அமினோ அமிலம், 'லைசின்' போதுமான அளவு இருக்கும் ஒரே தானியம், அரிசி; மற்ற தானியங்களில், இது மிகக் குறைந்த அளவு இருக்கும் அல்லது முழுமையாக இருக்காது.உடல் எடையைக் குறைக்க, அரிசி சாதம் சாப்பிடக் கூடாது என, அரிசி சாதம் சாப்பிடும் கலாசாரத்தில் வளர்ந்தவர்களை, மூளைச் சலவை செய்து, நம்ப வைத்தது, வர்த்தகம். உள்ளூரில் விளைந்த, பாரம்பரிய உணவுகளை தவிர்த்து, கவர்ச்சியான, இயற்கைக்கு மாறான உணவுகளை, சாப்பிட ஆரம்பித்த பின் தான், நீரிழிவு, உடல் பருமன், இதயக் கோளாறு, வாழ்க்கை முறை நோய்கள் அதிகமாகி விட்டன.'இந்தியன் சூப்பர் புட்ஸ்' நுாலிலிருந்து...