குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - ஆரோக்கியமான குழந்தை அழகு!
பிறந்த குழந்தையில் இருந்து, எல்லா வயதினருக்கும், உடல் பருமன் பிரச்னை தற்போது உள்ளது. புஷ்டியாக இருக்கும் குழந்தைகளையே எல்லாருக்கும் பிடிக்கிறது; இந்த மனநிலை மாற வேண்டும்.குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, உடல் பருமனாக இருக்க கூடாது. குழந்தையிலிருந்தே உடல் பருமனோடு இருந்தால், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் சேர்ந்து, 20 வயதில் நீரிழிவும், 30 வயதில் இதயக் கோளாறும் ஏற்படலாம்.பெண் குழந்தை எனில், பருவமடைந்த பின், ஹார்மோன், மாதவிடாய் கோளாறுகள் போன்ற பல பிரச்னைகள் வரலாம்.உடல் பருமன் இருக்கும் பெண்களுக்கு, மலட்டுத் தன்மை அதிகம் இருக்கும். அதனால் தான் மலட்டுத் தன்மை எனில், உடல் பருமனை குறைத்தாலே, பிரச்னை சரியாகி விடும்.டாக்டர் ஜெயராணி காமராஜ், மகப்பேறு மருத்துவர், சென்னை.jeyaranikamaraj@gmail.com