உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - எம்ட்டி கலோரி ஏற்படுத்தும் உடல் பருமன்!

பிடித்த விஷயத்தை திரும்பத் திரும்ப செய்யத் தோன்றும். அதிக கலோரி உள்ள சர்க்கரை சேர்த்த உணவை சாப்பிட்டுப் பழகி விட்டால், அதையே மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். காரணம், சர்க்கரைக்கு இது போன்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் திறன் அதிகம்.உடல் பருமன் ஏற்படுவதே, அதிக கலோரிகளை சாப்பிடுவதால் தான். அதிக கலோரி என்றால், ஒரு நாளில், 10 முறை சாப்பிடுவது, என்று அர்த்தம் அல்ல. சர்க்கரை அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுவதுதான் பிரச்னை. சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், கோக், பெப்சி போன்றவற்றில், கலோரி மட்டுமே உள்ளது. புரதம், வைட்டமின் என்று எதுவும் கிடையாது. இதற்குப் பெயர் தான், 'எம்ட்டி கலோரி!'அரிசி சாதத்தில் இருந்து, புரதம், சில, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுடன் சிறிது சர்க்கரையும் கிடைக்கிறது. அது எம்ட்டி கலோரி கிடையாது. அதேநேரம், சர்க்கரை மட்டுமே அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், கலோரி மட்டுமே கிடைக்கும். அதனால், வேறு எந்த பலனும் இல்லாமல் உள்ளது. இது போன்ற உணவை அதிகம் சாப்பிட்டு, அதற்கு ஏற்றாற்போல உடலுழைப்பு இல்லாத போது, உடல் பருமன் ஆகிறது.டாக்டர் சித்ரா ராமன்குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சென்னை.94901 36501


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்