குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: சாப்பிடுவதை பார்க்க கூடாது!
மாம்பழமும், நானும் வேறு இல்லை. நான் தான் மாம்பழம்; மாம்பழம் தான் நான். இந்த சீசனில், தினமும் இரண்டு மாம்பழங்களையாவது சாப்பிட்டு விட்டேன். அப்படியே மாம்பழக் கூடைக்குள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பைத்தியம். சைவ உணவு தான் சாப்பிடுவேன். சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் மாம்பழம் தவிர, தயிர் சாதமும், மசால் தோசையும் பிடிக்கும். இப்போது, பீட்சாவும், பாஸ்தாவும் அதனுடன் சேர்ந்து கொண்டது. 'இந்த லெவலில் போனால், உடலில் எல்லா பிரச்னைகளும் வரும்; உட்கார்ந்து பாடினாலே மூச்சு திணறும். மாம்பழம் பிடித்தால், ஒரு துண்டு மட்டுமே சாப்பிட வேண்டும்' என்று திட்டுகிறார், டாக்டர். ஆனால் யார் கேட்பது... கச்சேரிகள் தவிர, என் இசைப் பள்ளியில் முழு கவனம் செலுத்துகிறேன். கர்நாடக இசையே ஒரு மூச்சுப் பயிற்சி, யோகா போல என்பதால், எவ்வளவு தான் உணவு பிரியையாக இருந்தாலும், ஓரளவிற்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கிறது. பார்ப்போம்.பின்னி கிருஷ்ணகுமார், பாடகி