குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: உடல் பருமனை குறைக்கும், ராஜ உணவு!
குழந்தைகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக் கூடியது, அரிசி சார்ந்த, கார்போ ஹைட்ரேட் உணவுகள். ஒரு நாளில், ஒரு வேளையாவது அரிசி சாப்பிட வேண்டும். காலை உணவைத் தவிர்த்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. இரவு சாப்பாட்டிற்கு பின், அடுத்த வேளை உணவான, காலை உணவு சாப்பிடுவதற்கு, குறைந்தது, 10 மணி நேரம் ஆகிறது. காலை உணவு தான், உணவுக்கெல்லாம் ராஜா. இதைத் தவிர்த்து, நேரடியாக மதிய உணவு சாப்பிட்டால், குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிக்கும்.ஒரு வேளையாவது, காய்கறி, பழம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். வீட்டில் செய்து தரும் தின்பண்டங்கள் ஆரோக்கியமானவை; தேவையில்லாத கொழுப்பு சேராது.இரவு சாப்பிட்டவுடன், துாங்குவதற்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. குறைந்தது, அரைமணி நேரம் நடப்பது அல்லது வேறு ஏதாவது செய்யச் சொல்லலாம்.இந்தப் பழக்கங்களை தவறாமல் கடைப் பிடித்தாலே, குண்டு குழந்தை, ஆரோக்கியமாகி விடும்.டாக்டர் பி.எஸ்.அரவிந்த் ராஜாகுழந்தைகள் நல மருத்துவர், சென்னை.90037 52040