சிரித்தால் ரத்தம் வருகிறது!
* சிநேகா, சென்னை: நான் சிரிக்கும்போது ஈறுகள் அதிகம் தெரிகின்றன. பல் தேய்க்கும் போது ஈறுகளில் ரத்தம் கசிகிறது. சிலசமயம், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது...சிலருக்கு, ஈறுகள் அதிகம் வளருகின்றன. அவற்றை சுத்தம் செய்வது கடினம். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும். வாய் துர்நாற்றத்திற்கு, இது முக்கிய காரணம். 'லேசர் ஜின்ஜைவெக்டமி' மூலம், இதை சரி செய்யலாம். டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை.