உள்ளூர் செய்திகள்

அரிவாளாக மாறும் ரத்த சிவப்பணுக்கள்

உடல் முழுதும் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல வசதியாக ரத்த சிவப்பணுக்கள், நீள் வட்டமாக, நடுவில் சற்று குழியாகி டோனட் வடிவத்தில் இருக்கும். தொற்று பாதிப்பு, மலை பிரதேசங்களில் இருக்கும் போது, குளிர் காலங்களில், உடம்பு ஸ்ட்ரெஸ் ஆகலாம். இந்த சமயத்தில் ஆக்சிஜன் செல்வது குறையும். இதை, 'டி ஆக்சினேடேட் ஸ்டேட்ஸ்' என்று சொல்லுவோம். அந்த நேரங்களில், இந்த டோனட் வடிவ சிவப்பணு அரிவாள் வடிவத்தில் சுருங்கி விடும். இதற்கு சிக்கில் என்று பெயர். இப்படி அரிவாள் வடிவதில் சுருங்கும் போது, அடைப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படும். இதுவும் மரபியல் காரணமாக வரும் நோய் தான். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு, குரோமோசோம்களில் குறிப்பிட்ட வகை மரபணுக்களில், ஆல்பா, பீட்டா என்ற இரு சங்கிலித் தொடர்கள் உள்ளன. பீட்டாவில் பிரச்னை வரும் போது, சிக்கில் வருகிறது. சொந்தங்களுக்கு உள்ளேயே திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால் தான், நம் நாட்டில் மலை வாழ் மக்களுக்கு அதிகம் சிக்கில் அனீமியா உள்ளது.ஆப்ரிக்கா கண்டத்தில் வாழும் மக்களிடம் முதலில் இந்நோய் கண்டறியப்பட்டது. அடுத்தது, லத்தீன் அமெரிக்கா, மூன்றாவது இடத்தில் நம் நாடு உள்ளன. சிக்கில் செல் அனீமியா பற்றி விழிப்புணர்வு வேண்டும். காரணம், மலைவாழ் மக்கள் சமதளங்களிலும், இங்கிருந்து மலைப் பகுதிகளிலும் குடியேறுவது சமீப காலத்தில் இயல்பாக நடக்கிறது. திருமண பந்தங்களும் இரு தரப்பினரிடமும் இயல்பான ஒன்றாகி விட்டது.குழந்தை பிறந்த நான்கு மாதங்களில் கண்டுபிடித்து விடலாம். ரத்த சோகை, மஞ்சள் காமாலை, விரிவடைந்த மண்ணீரல், கை, விரல்களில் வீக்கம், சிதைந்த சிவப்பணுக்கள், நுரையீரலுக்கு சென்று ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துவதால், மார்பு பகுதியில் தொற்று, சுவாசக்கோளாறுகள வரலாம்.சில நேரங்களில் எலும்புகளில் வலி வரலாம். ரத்தப் பரிசோதனையில் சிக்கில் செல் உள்ளதா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அரிவாள் வடிவில் செல் மாறுவதைக் குறைத்து, ரத்த சோகையை கட்டுப்படுத்த நிறைய மருந்து, மாத்திரைகள் உள்ளன. வெளிநாடுகளில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர்.டாக்டர் பொன்னி சிவபிரகாசம்குழந்தைகள் நல கேன்சர் மருத்துவர், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !