உள்ளூர் செய்திகள்

இருதயம் காப்போம்: "ரத்தஅழுத்தம் அறிகுறியை வெளிப்படுத்தாது

இருதய சிகிச்சையில் 'ஸ்டென்ட்' என்றால் என்ன?ஜெரால்டு, வக்கம்பட்டி

இருதய ரத்தநாளத்தில் உள்ள அடைப்பை மூன்று வழிகளில் சரிசெய்ய இயலும். மருந்து, மாத்திரை மூலமோ, ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மூலமோ, பைபாஸ் ஆப்பரேஷன் மூலமோ சிகிச்சை அளிக்கலாம். இதில் எந்த சிகிச்சை தேவை என்பது எத்தனை சதவீதம் அடைப்பு உள்ளது என்பதை பொறுத்ததல்ல. எந்த இடத்தில், எந்த வகை அடைப்பு உள்ளது என்பதைப் பொறுத்தே அமைகிறது.

உதாரணமாக முக்கியமான இடத்தில் ஒரு அடைப்பு இருந்தாலும் சிலருக்கு பைபாஸ் ஆப்பரேஷன் தேவைப்படும். ஆனால் மூன்று, நான்கு இடங்களில் அடைப்பு இருந்தாலும் சிலருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலமே அடைப்பு சரிசெய்யப்படும். ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை என்பது, கையிலோ, காலிலோ ரத்தக்குழாய் வழியாக இருதயத்தினுள் 'கதீட்டர்' என்னும் குழாயை செலுத்தி, அதன் வழியாக பலூனை செலுத்தி, அடைப்பு நீக்கும், அறுவை இல்லா சிகிச்சை முறையாகும்.

பலூன் மூலம் அடைப்பு நீக்கிய பிறகு அந்த இடத்தில் அடைப்பு மறுபடியும் வராமல் இருக்க, பால்பாயின்ட் பேனா ஸ்பிரிங் போன்ற கருவி பயன்படுத்தப்படும். இதுதான், 'ஸ்டென்ட்' எனப்படும். இது அந்த அடைப்பை முழுவதுமாக நீக்குவதுடன், மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்கிறது. இது தற்போது பல்வேறு வகைகளில், 'மெடிக்கேட்டட் ஸ்டென்ட், நான் மெடிக்கேட்டட் ஸ்டென்ட்' என்று உள்ளது. மெடிக்கேட்டட் ஸ்டென்ட் என்பது, 'ஸ்டென்டு'க்குள் ஒரு பாலிமர் (கணிடூதூட்ஞுணூ) என்ற பகுதிக்குள் ஒரு மருந்து இருக்கும். அந்த மருந்து அடைப்பு திரும்பவும் ஏற்படாமல் தடுத்துவிடும். நான் மெடிக்கேட்டட் ஸ்டென்ட்டில் இந்த பாலிமரும், மருந்தும் இருக்காது. எனவே நான்மெடிக்கேட்டட் ஸ்டென்ட் பொருத்திய, சர்க்கரை நோயாளிகளுக்கு அடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் அடைப்பு வரும் தன்மை அதிகமாகும். எனவே ஸ்டென்ட் பொருத்தியவர்கள், 'அண்ணீடிணூடிண', 'இடூணிணீடிஞீணிஞ்ணூஞுடூ' ஆகிய மாத்திரைகளை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் எடுப்பது நல்லது.

எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்யப்பட்டது. அவ்வப்போது நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இது எதனால்?ஜி.ஜெகநாதன், மாரநேரி.

ஆஞ்சியோ பிளாஸ்டி செய்தவருக்கு நெஞ்சுவலி ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக இருதய நிபுணரிடம் சென்று, 'எக்கோ', 'டிரெட் மில்' பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதன் முடிவு நார்மலாக இருந்தால் அது இருதய வலி அல்ல என்பது உறுதியாகும். முடிவில் ஏதாவது கோளாறு இருந்தால், மறுபடியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவைப்படும். அதன் முடிவை பொறுத்து சிகிச்சை அமையும்.

எனது வயது 52. கடந்த 2 ஆண்டுகளாக 'கூஞுடூட்டிண்ச்ணூtச்ண 40ட்ஞ்' என்ற மாத்திரை எடுத்து வருகிறேன். உயர் ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை தொடர்ந்து எடுக்கலாமா?கே. செல்லையா, விருதுநகர்

'டெல்மிசார்டன்' என்ற மாத்திரை ரத்தக் கொதிப்புக்கு மிகவும் நல்ல மாத்திரை. இது அகீஆ என்ற மருந்து வகையை சார்ந்தது. இது உயர் ரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதுடன், பக்க விளைவும் வராது. எனவே இதை தொடர்ந்து எடுப்பதால் எந்த பாதிப்பும் வராது. எனவே டாக்டரின் ஆலோசனை இன்றி, நீங்களாகவே இந்த மாத்திரையை நிறுத்தக் கூடாது.

'பிளட் பிரஷர்' என்றால் என்ன? 'ஹைபர் டென்ஷன்' என்றால் என்ன?பி. குமார், மதுரை

பொதுவாக ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஒரு 'அழுத்தம்' இருக்கும். இதைத்தான் 'பிளட் பிரஷர்' என்கிறோம். இது நார்மலாக 120 / 80 என்ற அளவில் இருக்கும். ஹைபர் டென்ஷன் என்றால் பல்வேறு காரணங்களால் 'அழுத்தம்' கூடி ஒரு வியாதியாக வெளிப்படுகிறது. பொதுவாக ரத்தஅழுத்தத்தின் அளவு 140 / 90 ஐ தாண்டினால் ஹைபர் டென்ஷன் என்பர். இதை உயர் ரத்தஅழுத்தம் மற்றும் ரத்தக் கொதிப்பு என்றும் கூறலாம். இதை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், நரம்பு, கண், சிறுநீரகம், மூளை, இருதயம் என உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். பலருக்கு இந்த வியாதி இருப்பதற்கான அறிகுறிகள் இன்றியே உடலுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். எனவே இவ்வியாதியை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது முக்கியம்.

- டாக்டர் சி.விவேக்போஸ்மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !